திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், கூடங்குளம், இருக்கன்துறை பகுதிகளில் பல்வேறு கல்குவாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்குவாரிகளில் புவியியல் துறையில் பெறப்பட்ட நடைச்சீட்டு அளவை விட அதிக அளவு கனிமவளம் வெட்டி எடுத்து கடத்தப்படுவது குறித்து பொதுமக்கள் புகார் அளித்தனர்.
இரவு, பகலும் கல்குவாரிகளில் சக்திவாய்ந்த தோட்டாக்களை வெடித்து பாறைகளை தகர்ப்பதால் சுற்றுவட்டார கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர். அண்மையில் சீலாத்திகுளத்தில் கல்குவாரியில் வெடிவைத்த அதிர்வினால் வீடு இடிந்து விழுந்து ஒரு குழந்தை பலியானது.
மேலும் அரசு அனுமதியளித்ததை விடவும் அதிக கற்கள் பாரம் ஏற்றிச்செல்வதால் ரோடுகள் முழுக்க உடைந்து சேதமடைந்துள்ளன. ராதாபுரம் (Ramanathapuram District) வட்டார கல்குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் கனிமவளம் முழுவதும் போலியான நடைச்சீட்டுகள் மூலம் கேரள மாநிலம் கொண்டு செல்லப்படுகின்றன. கேரளாவில் கட்டுமான பணிகள் நடக்கும் விழிஞ்சம் துறைமுகத்திற்கு இங்கிருந்து தான் கனிமவளங்கள் கடத்தப்படுகின்றன.
Also Read | திருப்பூரில் பயங்கரம்: பணத்திற்காக கல்குவாரி அதிபர் லாரியில் கடத்திக் கொலை!!
இதுகுறித்து பொதுமக்களின் புகாரின் பேரில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் சிவ.கிருஷ்ணமூர்த்தி திடீர் சோதனைகள் நடத்தி லாரிகளை பறிமுதல் செய்தார். இருக்கன்துறையில் இசக்கியப்பன் என்பரது பெயரில் இயங்கும் ஒரு கல்குவாரியில் நடத்திய சோதனையில் 4 லட்சத்து, 3 ஆயிரத்து, 824 கனமீட்டர் கனிமவளம் நடைச்சீட்டின்றி கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
எனவே, அந்த நிறுவனத்திற்கு 20 கோடியே, 11 லட்சத்து, 64 ஆயிரத்து, 352 ரூபாய் அபராதம் விதித்தார்.நேர்மையான அதிகாரிகளான திருநெல்வேலி கலெக்டர் விஷ்ணு, சப்-கலெக்டர் சிவ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட எஸ்.பி.,மணிவண்ணன் ஆகியோர் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு கனிமவள கடத்தல் லாரிகளை பறிமுதல் செய்தனர்.
தி.மு.க.,பிரமுகர்கள் பினாமி பெயரில் நடத்துவதாக கூறப்படும் குவாரிகளுக்கு அபராதம் விதித்தனர். இதனால் ஆத்திரமுற்ற திருநெல்வேலி மாவட்ட தி.மு.க., பிரமுகர்கள் அண்மையில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் சிவ.கிருஷ்ணமூர்த்தியை டிரான்ஸ்பர் செய்ய காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்வது தான் திமுக அரசின் (DMK Government) சாதனையா? என பல அரசியல் பிரமுகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்குவாரிகளிலிருந்து முறைகேடாகக் கற்களை வெட்டி, கேரளாவுக்குக் கடத்திய கனிமவளக்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகளை நெருக்கடிக்குள்ளாக்கி, பணியிடமாற்றம் செய்வதுதான் திமுக அரசு மக்களுக்குத் தரும் விடியலா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்குவாரிகளிலிருந்து முறைகேடாகக் கற்களை வெட்டி, கேரளாவுக்குக் கடத்திய கனிமவளக்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகளை நெருக்கடிக்குள்ளாக்கி, பணியிடமாற்றம் செய்வதுதான் திமுக அரசு மக்களுக்குத் தரும் விடியலா?https://t.co/ohe3Gg7KcX pic.twitter.com/BE7D6Ken1x
— சீமான் (@SeemanOfficial) December 8, 2021
கனிமவள கடத்தல் லாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து பறிமுதல் செய்ததால் திருநெல்வேலி எஸ்.பி., மணிவண்ணனும் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நேற்று திருநெல்வேலி மாவட்ட புதிய எஸ்.பி.,யாக பொறுப்பேற்ற சரவணன், கல்குவாரி கனிமவள கடத்தல் போன்ற பிரச்னைகளால் பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்தார்.
தம்மை யாரும் சந்திக்க வரவேண்டாம் என ஒவ்வொரு பத்திரிகை அலுவலகத்திற்கு தகவல் சொல்லி பின்னர் பொறுப்பேற்றார். நேர்மையாக செயல்படும் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் விஷ்ணுவையும் மாற்ற குவாரி உரிமையாளர்கள் மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இதனிடையே அனுமதியின்றி இருக்கன்துறையில் கனிமவளம் கடத்தியதற்காக ரூ 20 கோடி அபராதம் விதிக்கப்பட்ட இசக்கியப்பன் என்பவரை நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வேறு சில நிறுவனங்களுக்கும் கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read | திருப்பூரில் பயங்கரம்: பணத்திற்காக கல்குவாரி அதிபர் லாரியில் கடத்திக் கொலை!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR