’பத்து அமாவாசைக்குள் அதிமுக அரியணை ஏறும்’ - பொள்ளாச்சி ஜெயராமன் ஆருடம்

பத்து அமாவாசைக்குள் அதிமுக அரியணை ஏறும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 7, 2021, 07:39 PM IST
’பத்து அமாவாசைக்குள் அதிமுக அரியணை ஏறும்’ - பொள்ளாச்சி ஜெயராமன் ஆருடம் title=

கோவை ஒசூர் சாலையில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொணடனர்.

ALSO READ | ’பூனை காணவில்லை’ அடையாளம் ‘உதட்டில் மச்சம்’... கண்டுபிடித்தால் ரூ.5000 சன்மானம்

இதில்,அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி பேசும் போது, ”திமுக ஆட்சி பத்து அமாவாசைக்குள் பஞ்சராகி விடும். பல கட்சிகள் தலைவர்களால் உருவாக்கப்பட்டது. இது மக்களால் தொடங்கப்பட்ட கட்சி. பல பொய்களை கூறி ஆட்சியை பிடித்தது திமுக. சொன்னதை செய்யாத திமுகவை கண்டித்து நாளை மறுதினம் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதிமுககாரன் அடி வாங்குவதில் விண்ணை தொட்டு நிப்பான். அடிப்பதில் ஆகாயத்தை தாண்டி அடிப்பான். 6 மாத காலம் பொறுமையாக இருந்த காரணத்தினால் நாங்கள் என்ன பிஸ்கோத்து பார்ட்டிகளா? நாங்கள் சிலிர்த்து எழுந்தால் அதிமுக எதிரிகள் தாங்கமாட்டார்கள். எந்த ஊரில் இருந்து எலி வந்தாலும் சரி, பெருக்கான் வந்தாலும் சரி. எங்களுக்கு அதைப்பற்றி கவலை இல்லை. எங்களுக்கு எஸ்.பி.வேலுமணி ஒருவரே போதும்” என அமைச்சர் செந்தில்பாலாஜியை குறிப்பிட்டு விமர்சித்தார்.

ALSO READ | நடிகர் ரஜினிகாந்த் உடன் சசிகலா திடீர் சந்திப்பு

தொடர்ந்து பேசிய அவர், ”அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாகவும், வளர்ந்ததாகவும் வரலாறு இல்லை. இந்த இயக்கத்தை காட்டி கொடுத்தவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள் என தெரியாத சூழ்நிலை தான் இருக்கிறது. அதிமுக எதற்கும் அஞ்சாது. அச்சப்படாது. எதிரிகளை பத்து அமாவாசைக்குள் வீழ்த்திக் காட்டுவோம். 10 அமாவசைக்குள் அதிமுக அரியணை ஏறும்” என அவர் தெரிவித்தார்.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Telegram Link: https://t.me/ZeeNewsTamil

 

Trending News