கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளை வாங்க தமிழக அரசு உத்தரவு
தற்போது பெருகி வரும் கருப்பு பூஞ்சை நோய்க்கு மத்தியில் கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்த 5000 குப்பி மருந்துகளை வாங்க தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பீதியை கிளப்பி வருகிறது. நாடு முழுவதும் பலர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். துரதிஷ்டவசமாக பலர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டனர்.
இந்த நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு வரும் கருப்பு பூஞ்சை நோய் இப்போது அனைவரையும் மிரட்டி வருகிறது. கொரோனா சிகிச்சையின் போது ஸ்டெராய்டுகள் அளிக்கப்படுகின்றது. உடலில் ஸ்டெராய்டுகள் மற்றும் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்களது உடலை இந்த கருப்பு பூஞ்சை எளிதாகத் தாக்குகிறது.
தமிழகத்திலும் (Tamil Nadu) நாளுக்கு நாள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்று தமிழக அரசு கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ளார்.
தற்போது பெருகி வரும் கருப்பு பூஞ்சை (Black Fungus) நோய்க்கு மத்தியில் கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்த 5000 குப்பி மருந்துகளை வாங்க தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் உத்தரவிட்டுள்ளது. இது தவிர தனியார் மருத்துவமனைகள் தங்களுக்கு தேவையான மருந்துகளை அந்தந்த முகமைகள் மூலம் ஏற்பாடு செய்து வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
ALSO READ: மதுரையை மிரட்டும் கருப்பு பூஞ்சை: இதுவரை 50 பேருக்கு தொற்று பாதிப்பு
பிரதானமாக மகாராஷ்டிரா, பீகார், உத்தராகாண்ட் ஆகிய மாநிலங்களில் அதிகமாக காணப்பட்ட கருப்பு பூஞ்சை நோய், இப்போது பிற மாநிலங்களிலும் பரவி வருகிறது. தற்போது தென் மாநிலங்களான கர்நாடகா, தெலுங்கானா, தமிழ்நாடு (Tamil Nadu) ஆகிய இடங்களிலும் மத்திய பிரதேசத்திலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய செய்தி வந்துள்ளன.
இந்த நிலையில், தமிழகத்தின் மதுரையில், இதுவரை சுமார் 50 பேர் கருப்பு பூஞ்சை (Black Fungus) நோயால் பாதிக்கப்பட்டுள்ளது பற்றி நேற்று தகவல் வந்தது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை தரப்பில் இந்த செய்தி அளிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், துவக்க நிலையிலேயே மதுரையில் 50 பேருக்கு இந்த நோய் இருப்பது தெரிய வந்ததால், அங்கு மக்களும் நிர்வாகமும் பீதியில் உள்ளனர். எனினும் இது முற்றிலும் குணப்படுத்தப்படக்கூடிய நோய் என சுகாதாரத்துறை தெரிவிக்கின்றது.
பொதுவாக, கருப்பு பூஞ்சைக்கான அறிகுறிகள் தென்பட்டவுடன் அதற்கான சிகிச்சை எடுத்தால், இந்த நோயை சரி செய்து விடலாம். எனினும், சிகிச்சை தாமதிக்கப்பட்டால், இதனால், கண் பார்வை இழப்பு, உயிர் இழப்பு போன்ற அபாயங்களும் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மியுகோர்மைகாசில் (Mucormycosis) அதாவது கருப்பு பூஞ்சை என்பது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் ஒரு பூஞ்சை தொற்றாகும். இது சமீப காலங்களில் உருப்பு மாற்றுக்கு உட்படுத்தப்பட்ட மற்றும் ஐ.சி.யுகளில் தீவிர நிலையில் உள்ள நோயாளிகளின் நோய் மற்றும் இறப்புக்கு ஒரு காரணியாக இருந்து வருகிறது. இது ஜைகோமைகோசிஸ் (Zygomycosis) என்றும் அழைக்கப்படுகிறது.
ALSO READ: தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் 7 பேர் உள்பட 9 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR