68 ஆயுள் தண்டைனைக் கைதிகள் விடுதலை; தமிழக அரசு உத்தரவு!
MGR நுற்றாண்டையொட்டி ஆயுள்தண்டனைக் கைதிகள் 68 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது!
MGR நுற்றாண்டையொட்டி ஆயுள்தண்டனைக் கைதிகள் 68 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது!
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 25.02.18 அன்று 10 ஆண்டுகள் தண்டனை நிறைவு செய்த ஆயுள் கைதிகளில் முதற்கட்டமாக 67 பேர் விடுதலை செய்யப்படுவர் என தெரிவித்தது.
இதனையடுத்து கடந்த வாரம் முதற்கட்டமாக 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது இரண்டாம் கட்டமாக மேலும் 68 ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சென்னை புழல் சிறையிலிருந்து 44 ஆண்கைதிகள், 8 பெண்கைதிகள் என 52 பேர் விடுதலை செய்யப்படுவர். அதேப்போல் திருச்சி சிறையிலிருந்து 10 பேரும், சேலத்திலிருந்து 4 பேரும் பாளையங்கோட்டை சிறையிலிருந்து 2 பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.