உணவு திருவிழாவில் பீப் கறி புறக்கணிப்பா? பா.ரஞ்சித் குற்றச்சாட்டு - அரசு விளக்கம்
Pa Ranjith | சென்னையில் நடைபெறும் உணவுத் திருவிழாவில் பீப் கறி (மாட்டிறைச்சி) புறக்கணிக்கப்பட்டதாக இயக்குநர் பா.ரஞ்சித் குற்றம் சாட்டிய நிலையில், தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
Pa Ranjith, chennai Food Festival | சென்னை உணவுத் திருவிழா மெரீனா கடற்கரையில் நடக்கிறது. இந்த உணவுத் திருவிழாவில் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகள் எல்லாம் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் பீப் கறி இடம்பெறவில்லை ஏன்? என இயக்குநர் பா.ரஞ்சித் நடத்தும் நீலம் பண்பாட்டு மையம் கேள்வி எழுப்பியது. இதற்கு தமிழ்நாடு அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவு திருவிழா டிசம்பர் 20 ஆம் தேதி தொடங்கியது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்தார்.
இந்த உணவு திருவிழா 24 ஆம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது. மதியம் 12.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் அரசு தெரிவித்துள்ளது. உணவு திருவிழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் லேடி வெலிங்டன் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம் மற்றும் ராணி மேரி கல்லூரி ஆகிய கல்லூரிகளின் வளாகங்களில் இலவசமாக வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்த உணவுத் திருவிழாவில் பீப் கறி இடம்பெறவில்லை என இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக அந்த அமைப்பின் எக்ஸ் பக்கத்தில் எழுதப்பட்ட பதவில், " சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரக்கூடிய உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன?. பெருமளவிலான மக்கள் பீப் சாப்பிட கூடியவர்கள். ஆனால், திட்டமிட்டே ஓர் உணவை புறக்கணிக்கப்படுவதை நீலம்பண்பாட்டு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது." என தெரிவித்துள்ளது.
ஆனால் உணவுத் திருவிழாவில் ஸ்டால் எண் 17ல் பீப் கறி விற்பனை நடக்கிறது. அதனால் நீலம் பண்பாட்டு மையத்தின் குற்றச்சாட்டை மறுத்திருக்கும் உணவுத் திருவிழா ஏற்பாடு செய்த அதிகாரிகள், பீப் கறி விற்பனை செய்யும் வீடியோவையும் இப்போது வெளியிட்டுள்ளனர். அதேநேரத்தில் உணவுத் திருவிழா குறித்து வெளியிடப்பட்ட நோட்டீஸில் பாரம்பரிய மற்றும் ஸ்பெஷல் உணவுகள் பட்டியலில் பல வகையான உணவுகள் பட்டியல் இடம்பெற்றுள்ளது. அந்த நோட்டீஸில் மாட்டிறைச்சி உணவுப் பட்டியல் இடம்பெறவில்லை.
மேலும் படிக்க | விஜய் எனது தம்பி! அவர் எனது எதிரி அல்ல - நாம் தமிழர் சீமான் பேட்டி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ