ஊழியர்களுக்கு பைக், கார் பரிசாக கொடுத்த நிறுவனம்... வேற எங்கையும் இல்ல... நம்ம சென்னையில்...!

Chennai Latest News Updates: சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் அதன் ஊழியர்களுக்கு 14 ஸ்கூட்டர், 2 புல்லட் பைக், ஒரு கார் ஆகியவற்றை பரிசாக வழங்கி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 22, 2024, 03:28 PM IST
  • இந்த பரிசுகளின் மொத்த மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.
  • இந்த தனியார் நிறுவனம் 2 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டதாகும்.
  • இந்த நிறுவனம் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது.
ஊழியர்களுக்கு பைக், கார் பரிசாக கொடுத்த நிறுவனம்... வேற எங்கையும் இல்ல... நம்ம சென்னையில்...! title=

Chennai Latest News Updates: நிறுவனத்தை தொடங்கி இரண்டே ஆண்டுகளில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு மொத்தம் சுமார் ரூ.25  லட்சம் மதிப்பிலான கார், பைக்குகளை பரிசாக வழங்கிய சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் - 14 ஸ்கூட்டர், 2 புல்லட் பைக், ஒரு கார் ஆகியவற்றை பரிசாக பெற்ற பணியாளர்கள் மகிழ்ச்சி அளிக்கிறது என SURMOUNT LOGISTICS SOLUTIONS நிறுவனத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குநரான டென்சில் ராயன் தெரிவித்துள்ளார்.

மேலும், 19 ஆண்டுகள் வேறு நிறுவனத்தில் பணியாற்றிய போது தனக்கு ஏராளமான நிறைவேறாத எதிர்பார்ப்புகள் இருந்தது எனவும் அத்தகைய எதிர்ப்பார்ப்புகள் எனது பணியாளர்களுக்கு இருக்காமல் இருக்கவே பரிசுகள் வழங்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு சலுகைகளையும், பரிசுகளையும் வழங்கி வருவது வாடிக்கையானது. குறிப்பாக, தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் சில தனியார் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு கார்கள், பைக்குகள் உள்ளிட்டவற்றை கடந்த காலங்களில் பரிசாக அளித்து மகிழ்வித்துள்ளனர்.

அந்த வகையில், சென்னை, சேத்துபட்டு பகுதியில் இயங்கிவரும் Surmount என்கிற தனியார் லாஜிஸ்டிக் நிறுவனமானது தங்கள் நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றும் பணியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கார்கள் பைக்குகள் ஆகியவற்றை பரிசாக அளித்து அசத்தி உள்ளனர்.

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் : ஜனவரி மாதம் ரூ.1000 எப்போது கிடைக்கும்?

SURMOUNT LOGISTICS SOLUTIONS PVT LTD என்னும் இந்த நிறுவனமானது சென்னையில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமாக 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நிறுவனம் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள்தான் கடந்திருக்கு என்ற போதிலும், தங்கள் ஊழியர்களின் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் கார்கள் பைக்குகள் ஆகியவற்றை பரிசாக அளித்துள்ளார் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான டென்சில் ராயன்.

சென்னை, சேத்துபட்டுவில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 14 பணியாளர்களுக்கு honda ஸ்கூட்டி வகை இருசக்கர வாகனத்தையும், 2 பணியாளர்களுக்கு Royal Enfield 350 bullet வகை இருசக்கர வாகனம் மற்றும் ஒரு பணியாளருக்கு கார் என மொத்தம் சுமார் 25 லட்சம் மதிப்பிலான வாகனங்களை அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டென்சில் ராயன் பரிசாக வழங்கினார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த, டென்சில் ராயன், கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எங்கள் நிறுவனத்தின் பணியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கார் பைக்குகள் ஆகியவற்றை பரிசாக வழங்கி உள்ளோம். நான் ஒரு நிறுவனத்தில் 19 ஆண்டுகள் பணியாற்றிய போது எனக்கு ஏராளமான எதிர்பார்ப்புகள் இருந்தது. அதில், பல நிறைவேறவில்லை. அத்தகைய எதிர்ப்பார்ப்புகள் எங்கள் பணியாளர்களுக்கு இருக்காமல் இருக்க அவர்களுக்கு பரிசுகள் வழங்கி உள்ளோம். மொத்தம் 25 லட்சம் மதிப்பிலான வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன. பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பரிசுகளைப் பெற்ற பணியாளர்கள் அளித்த பேட்டியில், எங்கள் நிர்வாக இயக்குநருக்கு நன்றி. இத்தகைய பரிசை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் தற்போது வாங்கும் ஊதியத்திற்கும், எங்களுக்கு இருக்கும் கடமைகளுக்கும் ஒரு பைக்கோ, காரோ வாங்குவதற்கு காலதாமதம் ஆகும். ஆனால், எங்கள் நிர்வாக இயக்குநர் எங்களுக்கு இந்த பரிசை அளித்துள்ளார். இந்தப் பரிசு எங்கள் தினசரி பயணத்திற்கு மிகவும் உபயோகமாக இருக்கும். மற்ற நிறுவனங்களில் இத்தகைய அங்கீகாரம் கிடைக்குமா எனத் தெரிவியவில்லை. ஆனால் எங்கள் நிறுவனத்தில் எதிர்பாராமல் கிடைத்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது எனத் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | ரேஷன் கார்டு இல்லாதவர்கள் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News