தமிழகத்தில் கடந்த ஓராண்டு காலமாகவே கொரோனாவின் தாக்கம் இருந்து வருகிறது. இதன் காரணமாக பள்ளிகளும் திறக்கப்படாமல் உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்களை எடுத்து வருகின்றனர்.


இப்படி இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், சில தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெற்றோர்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்ளாமல் அவர்களை துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர்.


கொரோனா ஊரடங்கினால் (Lockdown) போடப்பட்ட விதிமுறைகள் காரணமாக வேலைக்கு செல்லமுடியாத சூழலினால்   பொருளாதார பிரச்சினைகளும் பல குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ளது.


இதனால் அவர்களால் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளுக்கு மாற்றினர்.


 இந்த ஒரு வருட காலமும் அரசுப்பள்ளியின் (Government Schools) மாணவர் சேர்க்கை விகிதமும் கணிசமாக உயர்ந்து வருகிறது.


ALSO READ: தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க ஆலோசனை: அன்பில் மகேஷ் 


இதற்கு சான்றாக தான் திண்டுக்கல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஞானசம்பந்தன் அவர்கள் கோவை கேந்திரியா பள்ளியில் படித்து வந்த தனது மகளை   "பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்” 11ஆம் வகுப்பில் சேர்த்துள்ளார்.


அதன் பிறகு இது பற்றி அவர் கூறுகையில், “நானும் எனது மனைவியும் அரசு பள்ளியில் தான் படித்துள்ளோம். இன்று சமூகத்தில் நல்ல உயர்வான இடத்தில் தான் இருக்கிறோம். இதன் காரணமாகத் தான் எனது மகளையும் அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டுமென்று எண்ணினேன்.


இப்பள்ளியின் உள்கட்டமைப்பு வசதி, சுகாதாரம், இயற்கைச் சூழல் மாணவர் சேர்க்கை வீதம் என அனைத்தும் நன்றாக உள்ளது. இக்காரணத்தினால் தான் பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் எனது மகளை சேர்த்துள்ளேன்.” என கூறினார்.


அவர் தனது மகளை பள்ளியில் சேர்க்கும் பொழுது, பள்ளியின் தலைமையாசிரியை அருள்ஜோதி மற்றும் உதவி தலைமையாசிரியர் நந்திவர்மன் ஆகியோர் உடனிருந்தனர்.


இப்பள்ளி சிறப்பாக செயல்பட்டதற்காக 2017 -2018 ஆம் ஆண்டில் பிரதமரின் "சிறந்த பள்ளி” என்ற விருதினைப் பெற்றது. மற்றும் 2019 -2020 ஆம் ஆண்டு பசுமை பள்ளி விருதினையும் பெற்று சாதனை படைத்தது.


பழனி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இவ்வாண்டு மாணவர் சேர்க்கையும் ஆயிரத்தை கடந்துள்ளது.


 பொதுவாகவே பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் இக் கொரோனா காலக்கட்டம் நமக்கு பல படிப்பினைகளை உணர்த்தியுள்ளது.


அதில் ஒன்று தான் தனியார் பள்ளிகளுக்கு (Private Schools) நிகராக அரசு பள்ளிகளும் உள்ளன என்பது. இதனை பல  பெற்றோர்கள் உணர ஆரம்பித்திருக்கின்றனர்.


ALSO READ: TN Budget மின்ன‌ணு முறையில் தாக்கல் செய்யப்படும் : சபாநாயகர் அப்பாவு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR