மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் தாக்கல் செய்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச்சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளில் பல வித ஆர்ப்பாட்டங்கள் துவங்கின. பல தரப்பு மக்களும் இதை எதிர்த்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அப்போது தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் (MK Stalin) அவர்கள், இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது தவிர, திமுக தேர்தல் வாக்குறுதியில். தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்தச்சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 


அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தற்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் தனித்தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். இதைத் தொடர்ந்து இந்த தீர்மானம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. 


ALSO READ: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் செப்டம்பர் 15இல் திமுக முப்பெரும் விழா!


குடியுரிமை திருத்தச் சட்ட (CAA) திருத்தம் இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், இது மத நல்லிணக்கத்துக்கு உகந்ததாக இல்லை, இந்நாட்டுக்கு வருபவர்களை மதரீதியாக பாகுபடுத்தி பார்க்கும் வகையில் உள்ளது என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். 



2019 ஆம் ஆண்டு மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம், மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு உகந்ததாக இல்லை என அரசின் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அகதிகளாக வருவோரை மதரீதியாக பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் இந்த சி.ஏ.ஏ. சட்டம் உள்ளது என்று தமிழக அரசின் தீர்மானத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 


இதற்கிடையில், சிஏஏ சட்டதிருத்தம் சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என கூறி பா.ஜ.க-வினர் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.


இன்று சட்டசபை நிகழ்வுகளின் போது, அதிமுக-வினரும் (AIADMK) வெளிநடப்பு செய்யவே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க மனமில்லாமல் அதிமுகவினர் வெளியேறினர் என்பதே உண்மை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். எனினும், அவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டதாலேயே வெளிநடப்பு செய்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 


ALSO READ: கொரோனா தடுப்பூசி போடும் பணி முடிந்தவுடன் CAA அமல்படுத்தப்படும்: அமித்ஷா