முதல்வர் ஸ்டாலின் தலைமையில் செப்டம்பர் 15இல் திமுக முப்பெரும் விழா!

வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) தலைமையில் திமுக முப்பெரும் விழா காணொலி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

Last Updated : Sep 8, 2021, 11:10 AM IST
  • முதல்வர் ஸ்டாலின் தலைமையில் செப்டம்பர் 15இல் திமுக முப்பெரும் விழா!
  • சென்னை கலைஞர் அரங்கத்தில் (Kalaingar arangam) நடைபெறும்.
  • திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் செப்டம்பர் 15இல் திமுக முப்பெரும் விழா! title=

வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) தலைமையில் திமுக முப்பெரும் விழா காணொலி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள திமுக செய்திக்குறிப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக முப்பெரும் விழா 15.09.2021 புதன் கிழமை மாலை ஐந்து  மணியளவில் காணொலிக் காட்சி மூலமாக சென்னை கலைஞர் அரங்கத்தில் (Kalaingar arangam) நடைபெறும்.

ALSO READ : 7th pay commission: தமிழக அரசு ஊழியர்களுக்கு முதல்வர் அறிவித்துள்ள குட் நியூஸ்..!!

அப்போது மாவட்ட கழக செயலாளர்கள் , பொறுப்பாளர்கள் , தத்தமது மாவட்டத்திற்குட்பட்ட இடத்தில் விழாவினை காணொலி காட்சி வாயிலாக காணும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக (DMK) சார்பில் இந்தாண்டு நடத்தப்படும் முப்பெரும் விழாவில் பெரியார் விருது மதிவாணனுக்கும் ,அண்ணா விருது மூக்கையாவுக்கும் , கலைஞர் விருது கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த வேணுவுக்கும் , பாவேந்தர் விருது வாசுகி ரமணனுக்கும் , பேராசிரியர் விருது முபாரக்கிற்கும் வழங்கப்பட்டும் என ஏற்கனவே அறிவித்திருந்தது. குறிப்பிடத்தக்கது.!

ALSO READ : விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை - முதலமைச்சர் விளக்கம்!

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News