தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதிலிருந்து நிர்வாக மட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பல உயர் அதிகாரிகளின் மாற்றம் தொடர்ந்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், தற்போது, தமிழக அரசு 7 ஐ.ஏ.எஸ் (IAS) அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து  உத்தரவு பிறப்பித்துள்ளது.


இந்த உத்தரவு குறித்து தமிழக (Tamil Nadu) தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:


1.இதுவரை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணைச் செயலாளராக பதவி வகித்து வந்த எஸ்.செந்தாமரை நில நிர்வாக ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


2.வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணைச் செயலாளராக பதவி வகித்து வரும் மகேஸ்வரி ரவிக்குமார் பொதுப்பணித்துறை இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


3. வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநராகப் பதவி வகித்து வரும் எம்.அருணா, கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


4. தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை மேலாண் இயக்குநராகப் பதவி வகித்து வரும் ஷ்ரவண் குமார் ஜதாவத், வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், அவரை பொது (தேர்தல்) துறை துணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.


ALSO READ: தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று வெளியீடு


5. பள்ளிக் கல்வித்துறை (School Education Department) துணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் ஜே.ஆனி மேரி ஸ்வர்ணா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


6. உள்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் ஏ.ஜான் லூயிஸ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


7. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் எம்.லஷ்மி, சி.எம்.டி.ஏ தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்".


இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


ALSO READ: தி. நகர் உள்பட சென்னையில் 9 இடங்களில் இன்று முதல் கடைகளை திறக்க அனுமதி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR