உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு ஏற்ப தமிழக ஆளுநரே முடிவெடுக்கலாம் என்றும், இன்னும் 3 முதல் 4 நாட்களுக்குள் அவர் முடிவை அறிவித்துவிடுவார் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பேரறிவாளன் விடுதலை; தமிழக அரசு (Tamil Nadu) கூடுதல் அழுத்தம் தர  வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்


பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்சநீதிமன்றம் (Supreme Court) காட்டிய கண்டிப்பும், அதைத் தொடர்ந்து மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்த சில நாட்களில் நல்லது நடக்கும் என நம்புவோம். புதிய வாரம் புதிய நம்பிக்கை அளிக்கும் என்று பாமக தலைவர் தெரிவித்துள்ளார்.



தனது அடுத்த டிவிட்டர் பதிவில், பேரறிவாளன் விடுதலை குறித்து அடுத்த 4 நாட்களில் ஆளுனர் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ள நிலையில், அந்த முடிவு  நல்ல முடிவாக இருக்க வேண்டும் என்று தமிழக ஆளுனரிடம் (Governor) தமிழக அரசு மீண்டும் கூடுதல் அழுத்தம் தர வேண்டும்!



3. பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து  மீதமுள்ள  6 தமிழர்களையும் விடுதலை செய்ய ஆளுனர் ஆணையிட வேண்டும். இவை அனைத்தும் நடப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!



Also Read | பேரறிவாளன் விடுதலை தொடர்பாக 3-4 நாட்களில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR