மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருக்கும் நிலையில், அவர் வகித்து வந்த பொறுப்புகள் பிரித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் முத்துசாமிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமி கூடுதலாக கவனிக்கிறார். இந்நிலையில், ஈரோட்டி செய்தியாளர்களை சந்தித்த அவர், டாஸ்மாக்கில் ஓவர் டைம்மில் மது விற்பனை நடைபெறுவது தடுப்பது தமிழக அரசின் கடமை என தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Rain Alert: இதென்ன அதிசயம்..! சென்னையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில் கனமழை..!


ஈரோட்டில் பல்வேறு பகுதியில் புதிய தார்  சாலை பணிகளை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, கள்ளச்சாராயத்தை தடுக்க முதல்வர் கூட்டங்கள் நடத்தி ஆட்சியர்களுக்கும்,காவல்துறைக்கும் வழிமுறைகள் வழங்கியுள்ளார். கீழ் பவானி கால்வாயில் இருதரப்பு விவசாயிகளை பேலன்ஸ் செய்து நியாயமானதை செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். போராட்டம் என்பதற்காக படை உருவாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. விவசாயிகள் நிர்வாகத்திடம் குறைகளை தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளது‌ என்றார். 


மதுக்கடைகள் குறைக்க ஏற்கனவே ஆய்வு செய்து அறிவிப்பு கொடுத்துள்ளனர். அரசின் எண்ணம் டாஸ்மாக்கிற்கு வரவேண்டிய வருமானம் வேறு எங்கும் சென்றுவிடக்கூடாது தவிர டாஸ்மாக்கில் பெரிய வருமானம் உருவாக்க வேண்டும் என்பதல்ல என்றார். டாஸ்மாக்கில் டார்கெட் என்பது அரசாங்கத்திற்கு சம்பாதித்து கொடுப்பதற்காக அல்ல எனவும் கள்ளச்சாராயத்திற்கு செல்வதை தடுப்பதற்காக தான் என்றார். டாஸ்மாக்கில் மது வாங்க வேண்டியவர் கள்ளச்சாராயத்திற்கு வாங்குவதால் டாஸ்மாக்கிற்கு வருமானம் குறைகிறது என அமைச்சர் முத்துசாமி விளக்கினார். அரசின் எண்ணம் மது அருந்துபவர்களை குறைக்க வேண்டும் என்பதே என தெரிவித்த அவர், டாஸ்மாக் கடை திறப்பு நேரத்திற்கு முன்பும் பின்பும் மது விற்பனை செய்வதை தடுப்பது அரசின் கடமை என்ற கூறியுள்ளார்.


மேலும் படிக்க | தமிழகத்தில் தொடரும் கன மழை! பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ