அரசு விழாக்களில் செலவுகளை குறைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சால்வைகள், பூங்கொத்துகள் வழங்கும் செலவையும் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனாவால் முடங்கியுள்ள பொருளாதாரத்தை  மீட்க அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களுக்கு தடை விதித்தது தமிழக அரசு. இதனால், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி கொள்ளலாம் என்றும் ஆனால், புதிய பணியிடங்களை நிரப்ப தடை விதிக்கபட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடி காரணமாக அரசு துறைகளில் புதிய பணியிடங்களை உருவாக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய பணியிடங்களை உருவாக்குவதன் மூலம் ஏற்படும் செலவுகளை தவிர்க்க  தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.


மேலும், அரசு சார்ந்த விழாக்களில் செலவினங்களை குறைக்க அரசு அலுவலகங்களுக்கான மொத்த செலவுகளில் 20 சதவீதத்தை குறைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த உத்தரவில் அரசு கூறியுள்ளதாவாது... "அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அனுமதி கிடையாது. அரசு செலவில் வெளிநாடு பயணம், மாநிலத்திற்குள் விமானப் பயணத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. அரசு செலவில் மதிய மற்றும் இரவு விருந்துகளை தவிர்க்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


அரசு விழாக்களில் சால்வை, பூங்கொத்து, நினைவுப் பரிசு வழங்கலை தவிர்க்க வேண்டும். மேசை, நாற்காலிகள் உள்ளிட்ட அலுவலகத் தேவைகளை வாங்குவதை 50 சதவீதம் குறைக்கப்பட வேண்டும். விளம்பர செலவுகளை 25 சதவீதம் குறைத்துக் கொள்ளவும் அரசுத் துறைகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது" என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.