12 மணி நேர வேலை சட்டம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் 12 மணிநேர வேலை சட்டமசோதா கொண்டு வரப்பட்டு, திமுக கூட்டணிக் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்த தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள் 4 நாட்கள் 12 மணி நேரம் வேலை செய்துவிட்டு 3 நாட்கள் விடுப்பு வழங்க விரும்புவதாகவும், இது ஊழியர்கள் விருப்பத்தின்பேரில் மட்டுமே அமல்படுத்தப்படும், அதேநேரத்தில் வாரத்திற்கு 48 மணி நேரம் என்ற வேலை நேரத்தில் மாற்றம் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது. 


தமிழகத்தில் கடும் எதிர்ப்பு


இதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து சட்டமசோதாவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினர். மறுபுறம் தொழிற்சங்கள் சட்டமசோதாவை திரும்ப பெறாவிட்டால் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தன. இது தமிழக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. 


மேலும் படிக்க | அண்ணாமலைக்கு தமிழர்கள் மீது அக்கறை கிடையாது - இயக்குனர் அமீர்!


சட்டமசோதா நிறுத்தி வைப்பு 


இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் தொழிற்சங்க நிர்வாகிகள் கொடுத்த விளக்கத்தின் அடிப்படையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர சட்டமசோதாவை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  இந்தச் சூழலில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனிடையே 12 மணிநேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.


முதலமைச்சர் அறிவிப்பு


இந்நிலையில் உழைப்பாளர் தினமான மே 1 ஆம் நாளில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை சட்ட மசோதாவை தமிழக அரசு திரும்பப்பெற்றதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள உழைப்பாளர் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த அறிவிப்பை வெளியிட்டார். விட்டுக் கொடுப்பதை அவமானமாக கருதவில்லை, பெருமையாகவே கருதுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். வழக்கம்போல் 8 மணி நேர வேலையே தொடரும் என்றும், சட்ட மசோதா திரும்பப்பெற்றது சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு முறைப்படி தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 


மேலும் படிக்க | பேனா நினைவுச் சின்னம்: மெரினாவின் அடையாளம் போய்விடும்- ஜெயக்குமார்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ