தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் இன்று  ஓய்வு பெறுகிறார். எனவே அவருக்கு பதிலாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், இன்று மாலை மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் புதிய டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி பதவி ஏற்றுக்கொண்டார். அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு, டி.கே.ராஜேந்திரன் விடை பெற்றார்.


புதிய டி.ஜி.பி.யாக பதவியேற்ற ஜே.கே.திரிபாதி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். விவசாய குடும்பத்தில் பிறந்தவர். ஜே.கே.திரிபாதியின் உண்மையான பெயர் ஜலடகுமார். அந்த பெயரை சுருக்கமாக ஜே.கே. என வைத்துக்கொண்டு திரிபாதி என்ற தனது குடும்ப பெயரையும் உடன் இணைத்துள்ளார்.


டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் Mphil படித்துள்ள ஜே.கே.திரிபாதி Phd-யும் முடித்துள்ளார். 1985-ஆம் ஆண்டு IPS தேர்வில் வெற்றி பெற்று தமிழக காவல்துறையில் அடியெடுத்து வைத்தார்.


முதன் முதலாக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் உதவி காவல்துறை சூப்பிரண்டாக தனது பணியை தொடங்கிய இவர், அதன் பின்னர் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் சூப்பிரண்டாக பணியாற்றியுள்ளார். டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர காவல்துறை கமிஷனராக திறம்பட பணியாற்றினார்.


தென்சென்னை இணை கமிஷனராக பொறுப்பு வகித்து உள்ளார். ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்ற பிறகு மதுரையில் தெற்கு மண்டல ஐ.ஜி.யாக பணிபுரிந்தார். அதன்பிறகு ஆயுதப்படை, பொருளாதார குற்றப்பிரிவு, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆகியவற்றிலும் ஐ.ஜி.யாக பொறுப்பு வகித்து உள்ளார்.