கோயில் இடங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க முடியாது: அமைச்சர் சேகர் பாபு
சென்னை வடபழனியில் உள்ள ஆதிமூல பெருமாள் கோயிலில், ஆய்வு பணிகளை மேற்கொண்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசினார்.
சென்னை வடபழனியில் உள்ள ஆதிமூல பெருமாள் கோயிலில், ஆய்வு பணிகளை மேற்கொண்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசினார்.
சென்னை (Chennai) வடபழனியில் உள்ள ஆதிமூல பெருமாள் கோயிலில், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 79 ஏக்கர் நிலம் மீட்கப்ப்ட்டுள்ளதாக கூறிய அமைச்சர் சேகர் பாபு இதுவரை ரூ.500 கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட கோயில்களுக்கு சொந்தமான ஆக்கிரப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் ஆண்டு ஆணு காலமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளர்களை கண்டறிந்து, அவர்களை வாடகைதாரர்களாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்ப்பட்டு வருகிறது என்றும், அவர்களுக்கு பட்டா வழங்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் சேகர் பாபு கூறினார். முன்னதாக, கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் தாமாக முன் வந்து ஆக்கிரமிப்பு நிலங்களை ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறினார்.
ALSO READ | ₹250 கோடி மதிப்புள்ள சென்னை வடபழனி கோயில் நிலம் மீட்பு: அமைச்சர் சேகர் பாபு
கோயிலுக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க முடியாது. கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் உள்ள கடைகள் மற்றும் பிற ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, அது தொடர்பாக மறு பரிசீலனை செய்து வாடகை நிர்ணயிக்கப்படும் எனவும் சேகர் பாபு கூறினார்.
முன்னதாக, இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில் மற்றும் நிலங்கள் குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ் நாட்டில், இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பட்டின் கீழ் சுமார் 40,000-த்துக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் இந்தக் கோயில்களுக்கு சொந்தமாக சுமார் 5 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. அதில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டெடுக்கவேண்டும் என்று பல காலமாக, பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துவருகின்றன. மேலும், ஆக்கிரமிக்கப்பு நிலங்கள் தொடர்பாக நீதிமன்றங்களிலும் வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | புராதன கோயில்களை அரசு பாதுகாக்க வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR