கொரோனாவை தடுக்க உலக நாடுகளே திணறி வரும் சூழலில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது என முதல்வர் பழனிசாமி பெருமிதம்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மருத்துவத்துறை சார்ந்த பிரச்சனைக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கான தேவை ஏற்படவில்லை என்றும், கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் உயிர்ச்சேதம் குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 


முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள், கொரோனா நோய் தடுப்புப் பணிகள் மற்றும் முக்கொம்பு கதவணை கட்டுமானப் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.


இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கூறுகையில்... தற்போது இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கின்ற முயற்சியில் தமிழகம் சிறந்த முறையில் பணியாற்றி வருகிறது. திருச்சி மாவட்ட ஆட்சியர் தங்கள் மாவட்டத்தில் இந்த வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு கடுமையான முயற்சி எடுத்து வருக்கின்றனர். திருச்சி மாவட்ட ஆட்சியருடன், மாவட்ட நிர்வாகமும் சிறப்பான முறையில் கொரோனா வைரஸ் தடுப்பு முயற்சியில் ஈடுபட்டு, அதன் பரவலைத் தடுக்கின்ற ஒரு நிலையைப் பார்க்கின்றோம்.


READ | முன்னாள் காதலியின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றிய காதலன் கைது...


இந்த புதிய தொற்றை ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகப் பரவும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத் துறை, ICMR, மருத்துவ வல்லுநர்கள், நிபுணர்கள் சொல்கின்ற வழிமுறைகளை தமிழக அரசு அறிவித்து, அதை மாவட்ட நிர்வாகம் முறையாகக் கடைப்பிடித்ததன் விளைவாக, கொரோனா வைரஸ் தொற்றை இன்றைக்கு நாம் தடுக்கின்ற நிலையில் இருந்து கொண்டிருக்கின்றோம். உலகளவில் வல்லரசு நாடுகளில் கூட இந்த வைரஸ் பரவலைத் தடுக்க முடியாத ஒரு சூழல் இருக்கின்ற காலகட்டத்தில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு கடுமையான முயற்சி எடுத்து இன்றைக்கு கட்டுக்குள் வைத்திருக்கிறோம். 


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை 2015 ஆம் ஆண்டு நடத்தினார். அதில், சுமார் 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாய் தொழில் முதலீட்டை ஈர்த்தார். தமிழக அரசு 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இன்றைக்கு முதலீட்டை ஈர்த்து, சுமார் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அந்தப் பணிகளும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன" என அவர் தெரிவித்துள்ளார்.