மேலும் ஒரு இடைத்தேர்தலை சந்திக்க தயாராகும் தமிழ்நாடு!
நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது!
நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டவர் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார். இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை விட 2,59,933 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடினார்.
இதன் காரணமாக இவர் தான் வகித்து வரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று தான் வகித்து வந்த சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். சென்னை தலைமைச் செயலகத்திற்கு சென்று, சபாநாயகரை சந்தித்து, தனது சட்டமன்ற பதவியில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுத்தார். அவரது பதவிவிலகல் கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து விரைவில் நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்கப்படுகிறது.