ஒவ்வொரு துறையிலும் தமிழகத்தைச் சேர்ந்தவர் சிறந்தவராக இருக்கிறார் - பிரதமர் மோடி பேச்சு
ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் சிறந்தவராக இருக்கிறார் என தமிழகம் வந்த பிரதமர் மோடி கூறினார்.
தமிழ்நாடு வந்த பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு - சென்னை அதிவிரைவு சாலை,மதுரவாயல் - சென்னை துறைமுகம் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3ஆவது ரயில் பாதை, 506 கோடியில் மதுரை தேனி அகல ரயில் பாதை உள்ளிட்ட திட்டங்களையும் அவர் தொடங்கிவைத்தார். நேரு உள்விளையாட்டரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி வணக்கம் என்று கூறி தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டின் கலாசாரமும், மொழியும் மிகச்சிறப்பானவை. செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே.. என்று பாடினார் பாரதியார். தமிழ் மொழி நிலையானது, நித்தியமானது.
சென்னை முதல் கனடாவரை, மதுரை முதல் மலேசியாவரை, நாமக்கல் முதல் நியூயார்க்வரை, சேலம் முதல் தென்னாப்பிரிகாவரை பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு புகழ் நிறைந்தவை.
மேலும் படிக்க | இந்திய தந்தை காந்திஜியா மோடிஜியா?...பாவம் கங்கை அமரனே கன்ஃப்யூஸ் ஆகிட்டார்
பிரான்ஸில் நடக்கும் கான்ஸ் திரைப்பட விழாவில் எல்.முருகன் சிவப்பு கம்பளத்தில் கலந்து கொண்டார். கூடுதல் சிறப்பாக வேட்டி சட்டையில் கலந்து கொண்டார். அது தமிழை பெருமைப்பட செய்தது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இன்று ஒரு முக்கியமான நாள். 31000 கோடிக்கு திட்டங்கள் கிடைத்திருக்கின்றன.
உங்கள் குழந்தைகள் உங்களை விட சிறப்பான வாழ்வை வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள். அதற்கு மிக முக்கியம் உட்கட்டமைப்பு மேம்பாடு. அனைத்து கிராமங்களுக்கு அதிவேக இண்டர்நெட்டை கொண்டு செல்வதே எங்கள் நோக்கம். இது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள்
தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை மேலும் பிரபலப்படுத்த இந்திய அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது. செம்மொழி தமிழாய்வுக்கு புதிய வளாகம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு முழுக்க முழுக்க ஒன்றிய அரசே நிதி வழங்குகிறது.தேசியக் கல்விக் கொள்கை காரணமாக தொழில்நுட்ப, மருத்துவப் படிப்புகளை உள்ளூர் மொழிகளிலேயே படிக்க இயலும். தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்கள் இதனால் பலன் அடைவார்கள்.
மேலும் படிக்க | திராவிட மாடல் என்றால் என்ன?... பிரதமர் மேடையில் விளக்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
இலங்கை கடினமான சூழலை சந்தித்து வருகிறது. ஒரு நண்பனாக இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் இந்தியா செய்துவருகிறது. உணவு, மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை இந்தியா இலங்கைக்கு தருகிறது” என்று பேசினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR