சென்னை: தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதியவர்கள் முதல், புதிதாக வாக்களிக்க உரிமை பெற்ற இளைஞர்கள் என பலரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 


காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவிற்கு வந்த வாக்காளர்கள், கொரோனா தோற்று பரவலை தடுக்கும் விதமாக வாக்குப்பதிவு மையங்களில் சமூக இடைவெளிவிட்டு நின்றும், சானிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்திய பிறகு வாக்களிக்கின்றனர்.


வாக்குப்பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றிய பிரபலங்களும், அரசியல்த் தலைவர்களும் சொல்லும் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவற்றில் சில:


21 மாநகராட்சியும் திமுக கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்திருப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



மாநில அரசு நிறைவேற்ற வேண்டிய பணிகளை உள்ளாட்சி அமைப்பு மூலமாகவே நிறைவேற்ற முடியும் , எனவே வாக்காளர் அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.


தேர்தலில் தனித்து நிற்கும் தைரியம்  பாரதிய ஜனதா கட்சிக்கு உள்ளது, ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் அந்த தைரியம் வரவில்லை என்று பாஜகவின் குஷ்பூ சுந்தர் தெரிவித்தார்.


வாக்குப்பதிவு மையத்திற்கு 100 மீட்டருக்கு முன்பு வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்து வந்து வாக்களிக்க வேண்டும் என்ற விதிகளை மீறி, பாஜகவின் குஷ்பூ தடுப்புகளை நகர்த்தி வாக்குப்பதிவு மையத்தின் அருகிலேயே வந்தது காவல்துறையினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. 


தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும், இன்னாள் தெலுங்கானா மாநில ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், எந்த மாநிலத்தில் பொறுப்பில் இருந்தாலும்....
சொந்த மாநிலத்திற்கு வந்து வாக்களிப்பது எனது பொறுப்பு என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க | காலம் மாறுகிறது காற்று பாஜக பக்கம் வீசுகிறது - குஷ்பூ சிறப்புப் பேட்டி


மதுரையில் ஹிஜாப் அணிந்து வந்து வாக்களிக்க கூடாது என பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவித்தாக தகவல்கள் வந்துள்ளன. 


நீண்ட காலமாக வாக்கு செலுத்தி ஏமாந்தவர்களுக்கு வெறுப்பு உணர்வால் வாக்கு பதிவு மந்தமாக இருக்கும். மறைமுக தேர்தல் என்பதால் ஆர்வம் குறைவாக உள்ளது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளாட்சி தேர்தல் குறித்து கருத்து தெரிவித்தார்.


எனக்கென்ன நமக்கென்ன என்று ஒதுங்கி நின்றால் இந்நாட்டை ஒருபோதும் சரிசெய்ய முடியாது! அதனால் தயவு செய்து சனநாயகக் கடமையை ஆற்றுங்கள்!  என்று சீமான் வேண்டுகோள் விடுத்தார்.


வாக்குப்பதிவு செலுத்த வந்த நடிகர் விஜய், முதலில் வரிசையில் நிற்காமல் நேரடியாக வாக்குப்பதிவு மையத்திற்கு உள்ளே சென்றுவிட்டார். பின்னர் வெளியில் வந்த நடிகர் விஜய், வரிசையில் நின்றுக் கொண்டிருந்த பொதுமக்களிடம், வரிசையில் நிற்காமல் சென்றதற்கு மன்னிப்புக் கேட்டார்.



பல்வேறு வாக்குப் பதிவு மையங்களில் வாக்கு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்தாலும், சிறிது நேரத்தில் அவை சரி செய்யப்பட்டு, மீண்டும் வாக்குப் பதிவு தொடங்கியது. 
சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு கைகளில்  வைக்கக்கூடிய மை உடனடியாக அழிவதாக புகார் வந்துள்ளது.


மேலும் படிக்க | எங்கிருந்தாலும் வந்து வாக்களிப்பது ஜனநாயகப் பொறுப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR