சென்னை: சென்னை மயிலாப்பூர் தொகுதி 126 ஆவது வார்டு மந்தைவெளி பகுதியில் உள்ள ஸ்ரீ ராஜலட்சுமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில்,பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அமைப்பாளரும், நடிகையுமான குஷ்பூ சுந்தர் தனது வாக்கினை பதிவு செய்தார்.
வாக்கு செலுத்திய பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இது, திருமதி குஷ்பு ஜீ தமிழ் நியூஸ்க்கு அளித்த சிறப்பு பேட்டியின் சாரம்சம்.
பாஜக விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று தெரிவித்த குஷ்பூ, திமுக, பாரதிய ஜனதா கட்சியை குறைத்து மதிப்பிடுகிறது என்றும், இந்த உள்ளாட்சித் தேர்தலில்,எங்கள் செல்வாக்கு இந்த தேர்தலில் தெரிய வரும் என்றும் கூறினார்.
#Dutybound#oted
Please go and vote. Every election is important. Local body election is the base of a strong foundation. Do your duty. Pls vote. pic.twitter.com/11zliNUCkc— KhushbuSundar or NakhatKhan (@khushsundar) February 19, 2022
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்பதை எல்லாம் தாண்டி, நாங்கள் ஜெயிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது என்று குஷ்பூ உறுதிபட தெரிவித்தார்.
மேயர் தேர்தல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த திருமதி குஷ்பூ, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் உருவாகுமா என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.
அதிமுகவுடனான கூட்டணியால் தான் 4 சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக (BJP in Assembly Election) வென்றது என கூறுவது தவறு என்று கூறிய குஷ்பூ, இந்த கூற்று உண்மையாக இருந்திருந்தால், நாங்கள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்க மாட்டோமா என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க | நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 வாக்குப்பதிவு மும்முரம்
தேர்தலில் தனித்து நிற்கும் தைரியம் பாஜக விற்கு தான் உள்ளது, ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் அந்த தைரியம் வரவில்லை என்று பாஜகவின் தமிழக தலைவர்களில் முக்கியமான ஒருவரான திருமதி குஷ்பூ தெரிவித்தார்.
மக்களை சோம்பேறி ஆக்குவதற்கு பணம், டிவி, மின்விசிறி, கொலுசு கொடுக்கிறார்கள். மக்களுக்கு கல்வி, தண்ணீர், வீடு, பெண்களுக்கு பாதுகாப்பு, அனைவருக்கும் தொழில் இதுதான் வேண்டும் என்று குஷ்பூ கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, வாக்குப்பதிவு மையத்திற்கு 100 மீட்டருக்கு முன்பு வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்து வந்து வாக்களிக்க வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், பாஜகவின் குஷ்பூ, விதிகளை மீறி தடைகளை நகர்த்தி வாக்குப்பதிவு மையத்தின் அருகிலேயே வந்தது காவல்துறையினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மதுப்பிரியர்களுக்கு ஷாக்; நாளை முதல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR