சென்னை: கோவிட் -19 (COVID-19) காரணமாக தமிழகத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலம் 2020 ஆகஸ்ட் 31 வரை என மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டது. இந்த முடிவை முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி (Chief Minister Edappadi K Palaniswami) அறிவித்தார், சுகாதார நிபுணர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியாளர்களுடன் சந்திப்பை நடத்திய ஒரு நாள் கழித்து, இந்த அறிவிப்பை வெளியிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழகம் 2,34,114 பேர் பாதிப்பு மற்றும் 3,741 இறப்புகளைக் கொண்டுள்ளது. மானியல்த்தில் அதிகம் பாதித்த மிகப்பெரிய பகுதி தலைநகரான சென்னையில் (Chennai) தான். அதைத் தொடர்ந்து திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்கள் உள்ளன. 


தமிழகத்தில் கொரோனா வைரஸ் (Coronavirus) பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் தற்போது பல்வேறு தளர்வுகளுடன் இதுவரை 5 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 


ALSO READ | சேலம், கோவை, திருச்சி மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா நோய் தொற்று


இதுகுறித்து முதல்வர் (Edappadi K Palaniswami) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, " 14 லட்சம் பேர் காய்ச்சல் முகாம்களால் பயன் அடைந்துள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா வைரஸ் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. அனைவருக்கும் தமிழக அரசின் மூலம் இலவச முக கவசம் வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே 25,36,660 பரிசோதனைகள் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளன.


தமிழகத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு (Lockdown) நீட்டிக்கப்பட்டு உள்ளது என அறிவித்து உள்ளார். ஆகஸ்ட் மாத அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். ரெயில், விமானப் போக்குவரத்தில் தற்போதைய நிலை தொடரும், இ-பாஸ் நடைமுறையும் தொடரும். காய்கறி, மளிகை கடைகள் காலை 6 முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி. ஆகஸ்ட் 15ம் தேதி மத்திய அரசின் வழிகாட்டுதல்படி சுதந்திர தினம் கொண்டாடப்படும். பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில்  வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


ALSO READ | தமிழ்நாடு: கல்லூரிகள் ஆகஸ்ட் 3ம் தேதியிலிருந்து ஆன் லைன் வகுப்புகளை தொடக்க உத்தரவு


இந்த முறை என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன? எதற்கு அனுமதி? எதற்கு இல்லை எனப் பார்ப்போம்!


தமிழ்நாடு ஊரடங்கு வழிகாட்டுதல்களின்படி, ஆகஸ்ட் 31 வரை மாநிலத்தில் கட்டுப்பாடுகள் இருக்கும். ஆகஸ்ட் மாதத்தில் வரும் ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் (2, 9, 16, 23, 30), "முழுமையான ஊரடங்கு" கடைபிடிக்கப்படும்.


மாவட்டங்களுக்கு இடையே செல்ல இ-பாஸ் கட்டாயம்.


இந்திய ரயில்வே மற்றும் விமான நிறுவனங்களின் தற்போதைய தடை தொடரும். 


மெட்ரோ மற்றும் மின்சார ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.


பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படாது. பொதுப் போக்குவரத்துக்குத் தடை தொடரும்.


திரையரங்குகள், பொது நிகழ்ச்சிகள், கூட்டங்கள், ஊர்வலங்களுக்குத் தடை தொடர்கிறது. 


ஜிம்கள், நீச்சல் குளங்கள், கடற்கரைகள் மற்றும் பூங்காக்கள் மாநிலம் முழுவதும் மூடப்படும்.


ALSO READ | தமிழகத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.....துக்கத்தில் மக்கள்


இருப்பினும், ஆண்டுக்கு ரூ .10,000 க்கும் குறைவாக சம்பாதிக்கும் பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள கோயில்கள் திறக்க அனுமதிக்கப்படும்.


மேலும் அறிவிப்பு வரும் வரை பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்படும்.


உணவகங்களில் முன்பு இருந்தது போலவே காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். 


உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில்  50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் அமர அனுமதி. 


காலை 6 மணி முதல் இரவு 7 மணி உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில்  அமர்ந்து சாப்பிடலாம். 


இரவு 9 மணி வரை உணவகங்களில் வீட்டு விநியோக சேவைகளைத் தொடரலாம். 


உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும், அவை இயக்கப்படக் கூடாது.


காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.


அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்கள் மின் வணிக நிறுவனங்கள் மூலமாக வழங்க அனுமதிக்கப்படுகிறது.


கடைகள் மற்றும் சந்தைகளின் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது, இப்போது காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.


ALSO READ | கொரோனா காலத்திலும் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழகம் தான்: EPS