சேலம், கோவை, திருச்சி மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா நோய் தொற்று

மாவட்ட வாரியமாக பார்த்தால், அதிக பாதிப்பு சென்னையில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில், செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. சென்னையை பொறுத்த வரை ஒரு லட்சத்தை நெருங்க உள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 29, 2020, 07:24 PM IST
சேலம், கோவை, திருச்சி மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா நோய் தொற்று title=

சென்னை: இன்று சுகாதரத்துறை வெளியிட்ட செய்தியின் படி, தமிழகத்தில் மொத்த கொரோனா (Coronavirus) பாதிப்பின் எண்ணிக்கை 2,34,114 ஆக உள்ளது. அதேநேரத்தில் இன்று 82 பேர் மரணமடைந்து உள்ளதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,741 ஆக உள்ளது. அதேநேரத்தில் இன்று 5927 பேர் சிகிச்சை பலனடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேநேரத்தில் இன்று மட்டும் 60,794 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதேநேரத்தில் மாவட்ட வாரியமாக பார்த்தால், அதிக பாதிப்பு சென்னையில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில், செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. சென்னையை பொறுத்த வரை ஒரு லட்சத்தை நெருங்க உள்ளது. 

சேலம் மாவட்டத்தில் அதிகாரிக்கும் கோவிட் -19 தொற்று:
சேலத்தில் செவ்வாயன்று 124 புதிய கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மாவத்தின் கோவிட் -19 எண்ணிக்கையை 3309 ஆக உள்ளது. 

மாவட்டத்தில் தற்போது 1034 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2248 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 27 பேர் இந்த நோயால் இறந்துள்ளனர்.

ஜூலை 1 முதல் ஜூலை 23 வரையிலான மாவட்டத்தின் சராசரி எண்ணிக்கை 78 ஆகும். ஆனால் கடந்த சில நாட்களில், மாவட்டங்களில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜூலை 24 முதல் ஜூலை 28 வரை பதிவு செய்யப்பட்ட பாதிப்பின் அடிப்படையில், மாவட்டத்தின் சராசரி 142 ஐ எட்டியுள்ளது.

ALSO READ | நேற்றைய விட இன்று குறைவு!! தமிழகத்தின் இன்றைய COVID-19 நிலவரம்

கோவையில் COVID-19 சராசரி 250 ஆகும்:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 278 புதிய கோவிட் -19 தொற்று பதிவாகியுள்ளன. இதன் அடிப்படையில் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4052 ஆக உள்ளது.

மாவட்டத்தில் 1581 பேர் செயலில் உள்ளனர். இந்த நோயிலிருந்து 2427 பேர் மீண்டுள்ளனர். 44 பேர் இந்த நோயால் மரணமடைந்துள்ளனர்.

ஜூலை 4 முதல் ஜூலை 11 வரை மாவட்டத்தில் சராசரியாக 60 ஆக பதிவாகியுள்ளன. ஜூலை 12 முதல் ஜூலை 22 வரை மாவட்டத்தில் சராசரியாக 125 எனவும், அது ஜூலை 23 முதல் ஜூலை 28 வரை மாவட்டத்தின் சராசரி 250 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் நோய்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ALSO READ | கொரோனா காலத்திலும் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழகம் தான்: EPS

திருச்சி மாவட்டத்தின் நிலவரம்:
திருச்சியில் செவ்வாயன்று 149 புதிய கோவிட் -19 பாதிப்பு பதிவு செய்யப்பட்டு உள்ளது. நகரத்தின் கோவிட் -19 எண்ணிக்கையை 3755 ஆக உயர்ந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் 1398 பேர் செயலில் உள்ளனர். 2,297 பேர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

ஜூலை 1 முதல் ஜூலை 9 வரை மாவட்டத்தில் சராசரியாக 55 தொற்று காணப்பட்டன. ஜூலை 10 முதல் ஜூலை 20 வரை மாவட்டத்தின் சராசரி 107 ஆக அதிகரித்துள்ளது. ஜூலை 21 முதல் ஜூலை 28 வரை தொற்றின் பாதிப்பு சராசரி 176 ஆக இருப்பதால், மாவட்டத்தில் கோவிட் -19 தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Trending News