Tamil Nadu Lok Sabha Election Result 2024:புதுச்சேரியில் வெற்றி பெறப்போவது யார்?
Tamil Nadu Lok Sabha Election Result 2024: தமிழகத்தில் தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
Tamil Nadu Lok Sabha Election Result 2024: தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை தாண்டி புதுச்சேரியில் ஒரு லோக்சபா தொகுதி உள்ளது. பொதுவாகவே தமிழகத்தை 40 மக்களவை தொகுதிகள் என்று தான் கூறி வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரி மக்களவை தொகுதியின் வெற்றியும் மிகவும் முக்கியம். இந்த ஆண்டு மக்களவை தேர்தலில் கடந்த முறை வெற்றி பெற்ற வைத்தியலிங்கம் மீண்டும் போட்டியிட்டு உள்ளார். அவருக்கு வெற்றி கிடைக்குமா என்று பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்த்த வைத்திலிங்கம் புதுச்சேரியில் முதல்வராகவும் இருந்துள்ளார். இவரை எதிர்த்து புதுச்சேரியில் பாஜக கட்சி சார்பில் நமச்சிவாயம், அதிமுக கட்சி சார்பில் தமிழ்வேந்தன், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
புதுச்சேரி தொகுதி காங்கிரஸின் கோட்டையாக உள்ளது. புதுச்சேரி தொகுதிக்கு இதுவரை 14 முறை மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் 10 முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதர கட்சிகளான அதிமுக, திமுக, பாமக, என்ஆர் காங்கிரஸ் போன்ற தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. இந்த முறையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. ஆனாலும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் டப் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் இந்த முறை பாஜக இறங்கி வேலை செய்துள்ளது. இதுதவிர இதர கட்சிகளின் வாக்குகளும் நமச்சிவாயதிற்கு வர வாய்ப்புள்ளது.
கடந்த சில தேர்தல்களில் அதிமுக குறிப்பிட்ட ஓட்டுக்களை புதுச்சேரியில் வாங்கி இருந்தாலும் இந்த முறை மிகவும் கம்மியாக வாங்க வாய்ப்புள்ளது. ஏனெனில் இந்த 2024 மக்களவை தேர்தலில் அதிமுகவிற்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் கூட வெற்றி பெறாது என்று தேர்தல் கருது கணிப்புகள் வெளியானது. எனவே புதுச்சேரியில் வாக்கு வங்கியை பெறுவது சாத்தியம் இல்லை. அதிமுக புதுச்சேரியில் கடந்த 1977 ம் ஆண்டு வெற்றி பெற்றது. அதன் பிறகு ஒருமுறை கூட வெற்றி பெற முடியவில்லை. எனவே தற்போது புதுச்சேரியில் இருமுனை போட்டி தான் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் வைத்திலிங்கமா அல்லது பாஜக வேட்பாளர் நமச்சிவாயமா என்று தான் பலரும் எதிர்பார்த்து உள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ