மத்திய அரசிடம் 1464 கோடி ரூபாய் நிதி கோரும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
மத்திய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தமிழகத்திற்கு வருகை தந்தார். நேற்று அவரை சந்தித்த மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கால்நடைத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தேவையான நிதியை மாநிலத்திற்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
சென்னை: மத்திய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தமிழகத்திற்கு வருகை தந்தார். நேற்று அவரை சந்தித்த மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கால்நடைத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தேவையான நிதியை மாநிலத்திற்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அமைச்சர்களின் சந்திப்பு மற்றும் மாநில அரசின் கோரிக்கை தொடர்பாக தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு (Tamil Nadu University of Veterinary Sciences) கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அந்த செய்திக் குறிப்பு:
”சென்னை வந்துள்ள மத்திய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை, தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, கால்நடைத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தேவையான நிதி (Fund) கோரும் மனுவை வழங்கினார்”.
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
தமிழகத்தில் கோழியினங்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் விதமாக புதிய 3+ தரம் கொண்ட உயிரியல் பாதுகாப்புஆய்வகத்தை தமிழகத்தில் நிறுவ ரூ.103 கோடியே 45 லட்சம் தேவை.
கால்நடைகள் ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்க திறனை மேம்படுத்த ரூ.69 கோடியே 92 லட்சத்தில் தாதுஉப்புக் கலவை உற்பத்தி ஆலை அமைக்க வேண்டும்.
உறைவிந்து உற்பத்தி ஆலை அமைக்க ரூ.87 கோடியே 33 லட்சம் ரூபாய் நிதி தேவை.
நவீனமயமாக்கப்பட்ட நாட்டுக்கோழி இனப்பெருக்க பண்ணை அமைக்க ரூ.102 கோடியே 76 லட்சம் தேவை.
ராணிப்பேட்டையில் கோமாரி நோய் தடுப்பூசி ஆய்வகம் அமைக்க 146 கோடியே 19 லட்சம் ரூபாய் தேவை.
ராஷ்டிரிய கோகுல் மிஷன் திட்டத்தின் (Rashtriya Gokul Mission scheme) கீழ் ரூ.64 கோடியே 54 லட்சம் தேவை
Also Read | ’மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு ரஜினி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டாரா?
இதைத்தவிர, உள்நாட்டு நாய் (Dog) இனங்களை பாதுகாக்கவும், தீவனத்தை சிறந்த முறையில் உபயோகிக்கவும், உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.209 கோடியே 64 லட்சம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நவீன மருத்துவம் & கிடங்குகளை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய கால்நடை நிலையங்கள் கட்டவும், உள்கட்டமைப்பு வசதி களை மேம்படுத்தவும் ரூ.311 கோடியே 31 லட்சம் தேவை. கால்நடை நோய் கண்டறிதல் வசதிகளை மேம்படுத்த 22 கோடியே 94 லட்சம் ரூபாய் நிதி தேவை.
மருந்து சேமிப்பு கிடங்குகள் நிறுவ 63 கோடியே 65 லட்சம் ரூபாயும், கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையத்துக்கு 185 கோடியே 71 லட்சம் ரூபாய் தேவை. மேலும், நடமாடும் கால்நடை மருத்துவ சேவைகாக, 90 கோடியே9 லட்சம் ரூபாய் தேவை. இவை அனைத்தையும் செயல்படுத்த மொத்தம் ரூ.1,463 கோடியே 86 லட்சம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Also Read | சென்னை வெளிவட்டச் சாலை இரண்டாம் பகுதியை உடனடியாக திறக்க வேண்டும்: PMK
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR