’மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு ரஜினி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டாரா?

 ரஜினி, அஜீத், விஜய் என வசூலில் பல சாதனைகளை புரிந்த நடிகர்களின் பட்டியலில், தற்போது தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ திரைப்படம் முதலிடத்தில் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

Written by - ZEE Bureau | Last Updated : Jan 24, 2021, 03:03 PM IST
  • ’மாஸ்டர்’ திரைப்படம் வசூலில் சாதனை
  • ரஜினி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டாரா?
  • சித்ரா லட்சுமணன் வீடியோ வைரல்
’மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு ரஜினி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டாரா?

புதுடெல்லி: ரஜினி, அஜீத், விஜய் என வசூலில் பல சாதனைகளை புரிந்த நடிகர்களின் பட்டியலில், தற்போது தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ திரைப்படம் முதலிடத்தில் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு உதாரணமாக தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர் சித்ரா லட்சுமணனின் வீடியோ ஒன்றும் டிவிட்டரில் வைரலாகிறது. பல செய்தித்தாள்களிலும் மாஸ்டர் படத்தின் சாதனை ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி செய்திகளை வெளியிட்டுள்ளன.

‘ஒரு ஹீரோவுக்கும், மாஸ் ஹீரோவுக்கும் என்ன வித்தியாசம்? மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஒரு படத்தின் மையப்புள்ளியை தாங்கி நிற்பவர் கதாநாயகன். ஒரு மாஸ் ஹீரோவுக்கான அடையாளம் என்ன? ஒரு ஹீரோவின் திரைப்படம் சிறந்த திரைப்படமாக இல்லாவிட்டாலும், கூட்டம் வரும். அப்போதுதான் அந்த நடிகருக்காக ரசிகர்கள் திரள்கிறார்கள் என்று அர்த்தம். அந்த மாஸ் நடிகர்கள் தமிழ்நாட்டில் மிகச் சில நடிகர்களே இருக்கிறார்கள். அவர்களை வரிசைப்படுத்தினால், மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு, முதல் இடத்தை பிடித்துள்ளார் விஜய். அவருக்கு பிறகு தான், ரஜினி, அஜீத் எல்லாம் பட்டியலில் வருகிறார்கள்’.

இந்த டிவிட்டர் பதிவுக்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து பல்வேறு பதிவுகளை இட்டுவந்தால், ரஜினி, அஜித் ரசிகர்களின் எதிர்வினை வித்தியாசமாய் இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. இந்த திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதியன்று  வெளியானது. 

Also Read | பா.ரஞ்சித்தின் அடுத்த படைப்பு - யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் ‘பொம்மை நாயகி’!

திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்த போதிலும் மாஸ்டர் படத்தை ரசிகர்கள் மிக உற்சாகமாக வரவேற்று கொண்டாடினார்கள். படத்தை பார்த்த பலரும் பொங்கலுக்கு மாஸ்டர் (Master) திரைப்படம் சரியான விருந்தாக அமைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

மாஸ்டர் திரைப்படம் முதல் நாளன்று வெளியானத் தகவலின்படி, சென்னையில் மட்டும் முதல் நாளில்  .21 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
தற்போது மாஸ்டர் திரைப்படம் வெளியாகி 11 நாட்கள் ஆன நிலையில், தற்போது மிக அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறிவிட்டதாக டிவிட்டரில் தகவல்கள் வெளியாகின்றன. 

Also Read | அதிரடியான வரவேற்பு! மாஸ்டர் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News