சென்னை: அம்மா ஹோம் COVID-19 பராமரிப்பு திட்டத்தின் பலன்களை சென்னையில் ஏராளமானோர் பெற்றுள்ளனர். 450 க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஓமந்துரார் எஸ்டேட்டில் உள்ள தமிழ்நாடு மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வழங்கும் சேவையைத் தேர்வு செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், மற்ற மாவட்டங்களில் இந்தத் திட்டட்தில் ஆர்வம் காட்டியவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது.


பல வசதிகள் கொண்டுள்ள இந்தத் தொகுப்பு ஏன் மக்களிடையே பிரபலமாகவில்லை என்பது குறித்து அதிகாரிகள் கலந்தாலோசித்து வருகின்றனர். குறைந்த செலவில் பல வசதிகளை அளிக்கும் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள மக்களிடையே இதைப் பற்றிய புரிதலை அதிகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.


சென்னையைத் தவிர, வேலூரில் சுமார் 160 நோயாளிகளும், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த பலரும் இந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் இந்த மாவட்டங்களுக்கு வெளியே உள்ளவர்களிடையே ஆர்வம் மிகக் குறைவாகவே இருந்துள்ளது.


அம்மா ஹோம் கோவிட் -19 பராமரிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, COVID-19 நோயாளிகளுக்கு 14 நாள் மருத்துவ ஆலோசனை, 24/7 ஆன்-கால் ஆலோசனை, மருத்துவ அதிகாரியின் கண்காணிப்பு மற்றும் ஆயுஷ் மருத்துவர்களிடமிருந்து ஆலோசனை உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.


ALSO READ: தமிழகத்தில் கொரோனாவை வென்று வீழ்த்திய முதல் மாவட்டமானது பெரம்பலூர்


இந்த தொகுப்பில் உளவியல் ஆலோசனை, மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் அளவுகள் மற்றும் வெப்பநிலையை கண்காணித்தல் ஆகியவையும் உள்ளன. இவை அனைத்தும் அடங்கிய தொகுப்பிற்கான தொகை ரூ .2,500 ஆகும்.


“அறிகுறியற்ற மற்றும் வீட்டு தனிமை மட்டுமே தேவைப்படும் COVID-19 நோயாளிகள் பொதுவாக வீட்டு பராமரிப்பு திட்டத்தைப் பயன்படுத்துகிறார்கள். சென்னையில் உள்ள நோயாளிகள் இத்திட்டத்திற்கு நல்ல ஆர்வத்தை காட்டியுள்ளனர். இங்குதான் மாநிலத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கோயம்புத்தூர், ஈரோட், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் திருப்பூர் போன்ற பிற மாவட்டங்களும் நோயாளிகளை தனிமைப்படுத்தியுள்ளன. நோயாளிகளின் நலனுக்காக இந்த திட்டத்தை அப்பகுதிகளிலும் ஊக்குவிக்க வேண்டும்” என்று இந்த ஹோம் கேர் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆனந்த குமார் கூறினார்.


அரசு மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனைகளுக்கு பணம் செலுத்த நோயாளிகள் தயங்குவதாகவும், இதனால் வீட்டு பராமரிப்பு திட்டத்தைப் பெறுவதைத் தவிர்ப்பதாகவும் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.


ALSO READ: முதலமைச்சர் எடப்பாடியாருக்குக் அவசரமாக கடிதம் எழுதிய நடிகர் விஜயகுமார்..!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR