பொங்கல் பண்டிகைகயை முன்னிட்டு கோயில்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் பொங்கல் போனஸ் அளிக்கப்படும் என தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் பிரபாகர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில், “கோயில் (Temples) ஊழியர்கள் அனைவருக்கும் ரூ.1,000 பொங்கல் போனஸ் வழங்கப்படும். முழுநேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் அனைவருக்கும் பொங்கல் போனஸ் வழங்கப்படும். முதுநிலை மற்றும் முதுநிலை இல்லாத அனைத்து கோவில் பணியாளர்களுக்கும் போனஸ் வழங்கப்படும். 2019-20 வரை 240 நாட்கள் பணியாற்றியவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



ALSO READ: வரலாற்றில் முதன் முறையாக பொங்கலுக்கு விடுமுறை அறிவித்த Supreme Court: நன்றி தெரிவித்தார் EPS


பொங்கல் (Pongal) பண்டிகை தமிழகத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். தமிழர் திருவிழாவான பொங்கலில் ஆண்டுதோறும் தமிழக (Tamil Nadu) அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டும், கொரோனா தொற்றால் பல பொருளாதார சிக்கல்கள் இருந்த போதிலும், அரசு ஊழியர்களுக்கு பணியின் அடிப்படையில் 1000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதுமடுமல்லாமல், ஓய்வூதியம் (Pension) பெறுவோருக்கும் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதைத் தொடர்ந்து தற்போது கோயில் பணியாளர்களுக்கும் பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது, வரவேற்கத்தக்க முன்னேற்றமாக பொது மக்களால் பார்க்கப்படுகின்றது.


ALSO READ: TN Rain Update: அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும்-IMD