தமிழ்நாடு அரசு ரயில்வே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11, 13, 14, 15, 16, மற்றும் 17 தேதிகளில் பின்வரும் சிறப்பு ரயில்களை இயக்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தாம்பரம் - திருநெல்வேலி


06003 தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில், தாம்பரம் - திருநெல்வேலி இடையே ஜனவரி 11, 13, 16 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். திருநெல்வேலி - தாம்பரம் இடையே ஜனவரி 12, 14, 17 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 2.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.


மேலும் படிக்க | ஒரு வீடியோதான்..பல லட்சம் அபேஸ்! சர்ச்சையில் சிக்கிய அமலா ஷாஜி!


தாம்பரம் - தூத்துக்குடி


06001 தாம்பரம் - தூத்துக்குடி முன்பதிவில்லா சிறப்பு ரயில், தாம்பரம் - தூத்துக்குடி இடையே ஜனவரி 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.45 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.


06002 தூத்துக்குடி - தாம்பரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில், தூத்துக்குடி - தாம்பரம் இடையே ஜனவரி 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த சிறப்பு ரயில்கள் அனைத்தும் இரயில்வேயின் டிக்கெட் முன்பதிவு இணையதளம் மற்றும் பயணச்சீட்டு அலுவலகங்களில் முன்பதிவு செய்யலாம்.


சிறப்பு ரயில்கள் நின்று செல்லும் இடங்கள்: 


செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.


மேலும் படிக்க | பழனிச்சாமியை விரைவில் திகார் ஜெயிலுக்கு அனுப்புவேன் - ஓபிஎஸ் திட்டவட்டம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ