ஒரு வீடியோதான்..பல லட்சம் அபேஸ்! சர்ச்சையில் சிக்கிய அமலா ஷாஜி!

Amala Shaji: 2k இளசுகளின் திரிஷாவாக திகழும் அமலா ஷாஜி,  விவகாரமான ஒரு Page-க்கு விளம்பரம் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். நடந்தது என்ன? அமலா ஷாஜிக்கு எதிராக அவரது ரசிகர்களே கொதிப்பது ஏன்?   

Written by - Yuvashree | Last Updated : Jan 10, 2024, 08:24 PM IST
  • கேரளாவை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம், அமலா ஷாஜி.
  • இவரது ஒரு பதிவால் பலர் பல லட்சங்களை இழந்துள்ளனர்.
  • இதற்கு பின்னால் நடந்திருப்பது என்ன?
ஒரு வீடியோதான்..பல லட்சம் அபேஸ்! சர்ச்சையில் சிக்கிய அமலா ஷாஜி! title=

ஆன்லைன் மணி டபுளிங்: முன்பெல்லாம் ஒருவர் பிரபலமாக வேண்டும் என்றால் சின்னத்திரையிலோ, வெள்ளி திரையிலோ தோன்ற வேண்டும். ஆனால் இந்த டிஜிட்டல் யுகத்தில் இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்தாலே போதும்.  வேறு லெவலில் ட்ரெண்ட் ஆகிவிடலாம் என்ற நிலை வந்துவிட்டது. இதில் சிலர்  trend ஆவதோடு  மட்டும் அல்லாமல் promotion என்ற பெயரில் பலரிடம் பணம் வாங்கிக்கொண்டு மக்களுக்கு எதைவேண்டுமானாலும் promotion செய்வது வாடிக்கையாகிவிட்டது.

அதில் ஒன்றுதான் ஆன்லைன் மணி டபுளிங், மற்றும் online trading. இதில் இரண்டு மடங்கு வருமானம் ஈட்டலாம் என்று கூறி இன்ஸ்டாகிராம் வழியாக செய்யப்பட்ட மோசடி ஒன்று இப்போது அம்பலம் ஆகி உள்ளது. இன்ஸ்டா பிரபலங்கள் அமலா ஷாஜி, நடிகை ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்டோர் மீது இந்த விவகாரத்தில் புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன. 

அமலா ஷாஜி:

சினிமா பாடல்களுக்கு, அதே காஸ்டியூமில் ரீல்ஸ் போடுவதை வேலையாக வைத்திருக்கும் அமலா ஷாஜி, தனது நடனத்தாலும், அழகாலும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட  பாலோயர்களை தன் வசம் வைத்துள்ளார். இந்த நிலையில்தான் அமலா ஷாஜி கணக்கு மூலம் பெரிய அளவில் பண மோசடி ஒன்று நடந்து உள்ளதாக புகார் எழுந்தது. அதன்படி சமீபத்தில் அமலா ஷாஜி தனது வீடியோ ப்ரோமோஷன் ஒன்றில், “ என்னுடைய தோழி அனன்யா போரக்ஸ் ஒரு டிரேடிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் 1000 ரூபாய் முதலீடு செய்தால் 10 மடங்கு லாபம் கிடைக்கும். அதாவது 10 ஆயிரம் வரை கூட கிடைக்கும்”என்று விளம்பரம் செய்துள்ளார். தானும் இப்படி முதலீடு செய்து பல ஆயிரம் வருமானம் கிடைத்ததாகவும், அதேபோல நீங்களும் செய்து பலன் அடையுங்கள் என்றும் கூறியுள்ளார்.

இதை நம்பி நெட்டிசன்கள் சிலர் அங்கே கொடுக்கப்பட்ட அனன்யா போரக்ஸ் ஐடிக்கு மெசேஜ் செய்துள்ளனர். பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த அனன்யா போரக்ஸ் கணக்கிற்கு மெசேஜ் அனுப்பிய நபர் அது பற்றி விளக்கி உள்ளார். அதன்படி, அந்த கணக்கில் 1000 ரூபாய் பணம் அனுப்பி டிரேடட் செய்ய சொல்லி உள்ளனர். அப்போது 50 நிமிடத்தில் இதன் லாபத்தை உங்களுக்கு கொடுப்போம் என்றும் கூறியுள்ளனர்.

அதன்படியே 50 நிமிடத்தில் அந்த பணம் 15 ஆயிரம் ரூபாயாக க்ரிப்டோகரன்சி டிரேடிங்கில் மாறி உள்ளது. இதை ஸ்கிரீன் ஷாட் அனுப்பி, இந்த பணத்தை கொடுக்க டெபாசிட் பணமாக 8999 ரூபாய் அனுப்ப வேண்டும். அதையும் சேர்த்து மொத்தமாக உங்களுக்கு திருப்பி கொடுப்போம் என்று கூறியுள்ளனர். அதை அனுப்பிய பின்,  நீங்கள் டெபாசிட் தொகையை கூகுள் பேவில் அனுப்பிய போது அதை டெபாசிட் என்று குறிப்பிடவே இல்லை. அதனால் அது செல்லாது. மீண்டும் அனுப்புங்கள். அதற்குள் உங்கள் பணம் 1.30 லட்சமாக மதிப்பு கூடிவிட்டது. உங்கள் லாபம் அதிகரித்துவிட்டது என்று பண ஆசை உருவாக்கியுள்ளனர். 

மாேசடி..

பணத்தாசை காட்டிய பிறகு, நீங்கள் சர்வீஸ் சார்ஜ் 18,999 கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதை கேட்டு அந்த நபர். எனனிடம் அவ்வளவு பணம் இல்லை என்றதும். சரி 15999 கொடுங்கள் போதும் என்று கூறி அதைக் கேட்டுள்ளார் இதையடுத்து இந்தியாவில் க்ரிப்டோகரன்சிக்கு வரி உண்டு. 30 ஆயிரம் வரை வரி விதிக்கப்படும். நீங்கள் 31 ஆயிரம் ரூபாயை இதற்கு அனுப்புங்கள் என்று கூறி உள்ளனர்.

மேலும் படிக்க | தற்காலிக பேருந்து ஓட்டுநர்.... கார் மீது மோதி விபத்து!

அவ்வளவு தொகையை அனுப்ப முடியாது.. நீங்கள் நான் இதுவரை கொடுத்த 26 ஆயிரம் ரூபாயை என்னிடம் திருப்பி கொடுங்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கும் அவர்கள் ஓகே.. உங்களுக்கு ரீபண்ட் செய்துவிட்டோம்.. 15-30 நாட்களில் உங்கள் கணக்கிற்கு பணம் வரும் என்று கூறி உள்ளனர்.

இதே முறையில் மொத்தமாக பல ஆயிரம் ரூபாயை இந்த அனன்யா போரக்ஸ் ஆட்டையை போட்டுள்ளது. அந்த கணக்கில் பலர் இப்படி பணம் கொடுத்து ஏமாந்து உள்ளனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அனன்யா போரக்ஸ் என்ற ஆளே இல்லை. அந்த கணக்கே போலி அக்கவுண்ட் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொய்யான கணக்குகளை தொடங்கி அதன் மூலம் டிரேடிங் செய்து பல கோடி பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி இந்த கணக்கு ஏமாற்றி உள்ளது. இதேபோல் போரக்ஸ் கணக்குகள் பல இன்ஸ்ட்டாவில் உள்ளன.

இந்நிலையில் முன்னாள் காவல்துறை உயர் அதிகாரியான ரவி,  ஆன்லைன் மூலமாக இரட்டிப்புலாபம் என யார் சொன்னாலும் நம்பாதீர்கள்  என எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரிடம் நமது செய்தியாளர் தமிழரசன் நடத்திய தொலைபேசி கலந்துரையாடலை கேட்கலாம். 

விசாரிக்காமல் விளம்பரம்..

இந்த விவகாரத்தில் அமலா ஷாஜிக்கு நேரடி தொடர்பு இல்லை என்றாலும் அவர் எதையும் விசாரிக்காமல் விளம்பரம் செய்ததே தவறு. இதுவும் ஒரு வகையில் மோசடிக்கு உடந்தைதான் என பலரும் அமலா ஷாஜியை வறுத்தெடுத்து வருகின்றனர்.மேலும் இப்படி மக்களை தவறான வகையில் வழிநடத்தும் இன்ஸ்டாகிராம் இம்ப்ளூஎன்சர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

மேலும் படிக்க | போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை கிண்டலடித்த அமைச்சர் துரைமுருகன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News