மீண்டும் 2000 தொற்றுகளை நோக்கி தமிழக கொரோனா பதிவு... அதிர்ச்சியில் மக்கள்!
தினசரி 2000 தொற்றுகள் என தமிழக மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது கொரோனா வைரஸ்,,,
தினசரி 2000 தொற்றுகள் என தமிழக மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது கொரோனா வைரஸ்,,,
தமிழ்நாட்டின் சமீபத்திய கொரோனா வைரஸ் புள்ளிவிவரங்கள் மாநிலத்தின் ஒரு இருண்ட காலத்தை சித்தரிக்கின்றன. மாநிலத்தில் பதிவான ஒரு நாள் எண்ணிக்கையானது ‘15 நாட்களுக்கு முன்பு’ அதுவரை இல்லாத அளவிற்கு 1,000 வழக்குகளை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த எண்ணிக்கை 1,875-என 2,000-னை நோக்கி நகர்ந்துக்கொண்டு இருக்கிறது.
1.5 கோடி மதிப்பீட்டில் பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி திறப்பு...
இன்றைய புள்ளிவிவரங்கள், வரவிருக்கும் நாட்களில் தமிழ்நாட்டின் தினசரி எண்ணிக்கை தவிர்க்க முடியாத 2000 வாசலைத் தாண்டிவிடும் என்பதைக் குறிக்கிறது.
தமிழக சுகாதாரத்துறை அறிக்கையின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் 1875 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. இதில் சென்னையின் மட்டும் 1407 தொற்றுகள் பதிவாகியுள்ளது. அண்டை மாவடங்களான செங்கல்பட்டு 127 புதிய வழக்குகளுடனும், திருவள்ளூர் 72 வழக்குகளும் உள்ளன. தமிழக சுகாதாரத்துறை அறிக்கையின் படி மாநிலத்தில் 38,716 தொற்றுகள் பதிவாகியுள்ளது.
பிற மாவட்டங்கள் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டில் இருப்பதைக் காட்டுகின்றன.
சிறப்பாக செயல்படும் மாவட்டமாக வர்ணிக்கப்பட்ட கோயம்புத்தூரில் 3 தொற்றுகள் பதிவாகியுள்ளது. நாமக்கல், திருப்பூர், நீலகிரி போன்ற மாவட்டங்கள் வியாழக்கிழமை பூஜ்ஜிய வழக்குகளை பதிவு செய்ததால் உறுதியளிப்பதற்கான அடையாளங்களாக நின்றன.
ஜூன் 11 நிலவரப்படி தமிழ்நாட்டில் 15,456 பேர் பரிசோதிக்கப்பட்டனர். இதுவரை 6,25,312 நபர்கள் சோதனை செய்துள்ளனர். 16,829 மாதிரிகள் இன்று சோதனை செய்யப்பட்டன. மேலும் 564 மாதிரிகள் செயல்பாட்டில் உள்ளன.
54.7 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட சாலை மேம்பாலம்; திறந்து வைத்தார் முதல்வர்!...
தகவல்கள் படி 12 வயதிற்குட்பட்ட 1999 குழந்தைகள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிகிறது. செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 17,659-ஆக உள்ளது.
தினசரி 2000 தொற்றுகள் என பயணத்தை நகர்த்தி செல்லும் தமிழகத்தில், இன்று 1372 பேர் குனம்பெற்று வீடு திரும்பினர். இத்துடன் 20,705 பேர் கொரோனாவில் இருந்து மாநிலத்தில் மீண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளையில் வியாழக்கிழமை மாநிலத்தில் 23 இறப்புகள் பதிவானது. இத்துடன் மாநிலத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 349-ஆக அதிகரித்துள்ளது.