தமிழக கடற்கரையை ஒட்டி (5.8 கிலோ மீட்டர் உயரத்தில்) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் (TN Rain) கனமழை பெய்யும் என வானிலை ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

31.12.2021: கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும்,   உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


01.01.2022: கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும்,  உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


02.01.2022: கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


03.01.2022: தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும். ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும்


04.01.2022: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


ALSO READ | Chennai Rain: திக்குமுக்காடிய சென்னை; 4 மாவட்டங்களுக்கு விடுமுறை! 


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 


டிஜிபி அலுவலகம் (சென்னை) 24, ஆவடி (திருவள்ளூர்) 23, எம்ஆர்சி நகர் (சென்னை) 21, சென்னை நுங்கம்பாக்கம்,  பூந்தமல்லி (திருவள்ளூர்), எம்ஜிஆர் நகர் (சென்னை), அம்பத்தூர் (திருவள்ளூர்) தலா 20, அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), செம்பரபாக்கம் (திருவள்ளூர்), தொண்டையார்பேட்டை (சென்னை), ஏசிஎஸ் கல்லூரி (சென்னை) தலா 19, அய்யனாவரம் (சென்னை), ஒய்எம்சிஏ நந்தனம் தலா 18, பெரம்பூர் (சென்னை) 15, சோழிங்கநல்லூர் (சென்னை), கொரட்டூர் (திருவள்ளூர்) தலா 12, சீர்காளி (மயிலாடுதுறை), திரூர் கேவிகே (திருவள்ளூர்) 11 , கொள்ளிடம் (மயிலாடுதுறை), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), பூண்டி (திருவள்ளூர்) தலா 10, கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), சோழவரம் (திருவள்ளூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), பள்ளிக்கரணை (சென்னை) தலா 9, சிதம்பரம்,  மயிலாடுதுறை (மயிலாடுதுறை), தாம்பரம் (செங்கல்பட்டு), சத்யபாமா பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு) தலா 7.


மீனவர்களுக்கான எச்சரிக்கை: 


31.12.2021 ,01.01.2022: குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.


இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரியகையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


02.01.2022 முதல் 04 .01.2022 வரை: குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.


மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.


ALSO READ | கனமழை எச்சரிக்கை! சென்னை மற்றும் மூன்று மாவட்டங்களுக்கு RED ALERT


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR