Delta Plus variant : கொரோனா இரண்டாவது அலை பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இப்போது மூன்றாவது அலை குறித்த கவலை அதிகரிக்கும் வகையில், புதிய டெல்டா பிளஸ் (Delta Plus variant) வைரஸ் பரவல் கண்டறிப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உருமாறிய டெல்டா வைரஸ் டெல்டா-பிளஸ் (Delta Plus variant) என அழைக்கப்படுகிறது. டெல்டா பிளஸ் அல்லது AY.1 என அழைக்கப்படும் இந்த வகை உருமாறிய வைரஸ், எளிதாக பரவக்கூடியது. இந்த வைரஸ் நுரையீரல் அணுக்களுடன் எளிதாக தாக்கக்கூடியது. இந்தியாவில் இதுவரை 40 பேருக்கு டெல்டா பிளஸ்  வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.


ALSO READ: ஒரேநாளில் 80 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கி இந்தியா சாதனை


இந்த நிலையில், தமிழகத்திலும் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இந்ததகவலை தெரிவித்துள்ளார். ஆயிரத்திற்கும் அதிகமான மாதிரிகளை பரிசோதனை செய்யப்பட்டதில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


முன்னதாக, செவ்வாய்க்கிழமை (ஜூன் 22), சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் டெல்டா ப்ளஸ் திரிபு பரவல் கவலை அளிக்கு விஷயம் கூறியது. இது தொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சகம், அறிவுறுத்தல்களை வெளியிட்டு, மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களும், இதனை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தது. 


ALSO READ | COVID-19 தடுப்பூசி மலட்டுத் தன்மையை ஏற்படுத்துகிறதா; சுகாதார அமைச்சகம் கூறுவது என்ன..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR