கொரோனா தொற்று எண்ணிக்கையில் புதிய உச்சத்தை தொட்டது தமிழகம்....
மாநில சுகாதாரதுறை அமைச்சகதின் புல்லட்டின் படி, கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 3,940 கொரோனா தொற்றுகள் மற்றும் 54 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது.
மாநில சுகாதாரதுறை அமைச்சகதின் புல்லட்டின் படி, கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 3,940 கொரோனா தொற்றுகள் மற்றும் 54 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது.
இதையடுத்து மாநிலத்தில் ஒட்டுமொத்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 82,275-ஆகவும், செயலில் உள்ள தொற்றுகளின் எண்ணிக்கை 35,656-ஆகவும் உள்ளன என்று மாநில சுகாதார புல்லட்டின் குறிப்பிட்டுள்ளது.
READ | கோவை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா...
37 மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது, குறிப்பாக இன்று மட்டும் 1,992 புதிய தொற்றுகளை பதிவு செய்து. இதையடுத்து சென்னையில் ஒட்டுமொத்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 53,762-ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து செங்கல்பட்டு (5,051), திருவள்ளூர் (3,524), மதுரை (1,995) மற்றும் காஞ்சீபுரம் (1,791) தொற்றுகளை பதிவு செய்துள்ளது.
சுகாதாரத்துறை தகவல்கள் படி கடந்த 24 மணி நேரத்தில் 54 இறப்புகள் பதிவாகியுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் COVID-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,079-ஆக அதிகரித்துள்ளது.
நேர்மறையான பக்கத்தில், 1,443 Covid-19 நோயாளிகள் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆக, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மொத்தமாக குணப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 45,537-ஆக உயர்ந்துள்ளது.
READ | சலூன் கடைகள் செயல்பட அனுமதி... இயல்பு நிலைக்கு திரும்புகிறதா மும்பை?
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 0-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4012-ஆக அதிகரித்துள்ளது.
தகவல்கள் படி இதுவரை, 11,10,402 மாதிரிகள் (இன்று 32,948 மாதிரிகள்) சோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 47 அரசு மற்றும் 43 தனியார் ஆய்வகங்களில் COVID-19 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் தமிழக அரசின் புல்லட்டின் தெரிவிக்கிறது.