கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் மக்களையும் அரசாங்கத்தையும் பாடாய் படுத்து வருகிறது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துண்டே இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்திலும் (Tamil Nadu) கடந்த சில நாட்களாக தொற்றின் அளவு அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15,830 பேருக்கு கொரோனா (Coronavirus) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11,13,502 ஆகும். மறுபுறம் இன்று ஒரே நாளில் மட்டும் 14,043 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இது வரை 9,90,919 பேர் கொரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.




ALSO READ | Coronavirus Updates : சற்று வேகம் குறைந்த கொரோனா; 3.23 லட்சம் புதிய பாதிப்புகள்


தமிழகத்தில் இன்று 1,08,855 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரே நாளில் 1,21,549 மாதிரிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 2,18,80,233 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்றைய நிலவரப்படி 9,508 ஆண்களுக்கும், 6,322 பெண்களுக்கும் கொரோனா புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 6,72,280 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 4,41,184 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 38 ஆகவும் உள்ளது.



தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 77 பேர் உயிரிழந்துள்ளனர் அவர்களில் 31 பேர் தனியார் மருத்துவமனையிலும் 46 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 13,728 ஆக அதிகரித்துள்ளது. 


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR