TN School News in Tamil: கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் அன்றே புத்தகம் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு. மேலும் மாவட்ட விநியோக மையங்களில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பொருட்களை முன்கூட்டியே பள்ளிகளுக்கு அனுப்ப தமிழக பள்ளிக்கல்வித் துறை தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:
தமிழ்நாட்டில் 2022 - 2023 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதியுடன் முடிவடைந்ததை ஒட்டி, ஏப்ரல் 29 தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. ஒரு மாதம் முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால், வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகள் திறக்கப்படும் என்றும், ஜூன் வரை வெப்ப அலை நிலை நீடித்தால், மீண்டும் திறக்கும் தேதியை மாற்றுவது குறித்து பரிசீலிப்போம் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். 


பள்ளி திறக்கும் நாள் அன்றே பாடப்புத்தகம்:
எனவே தமிழக பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டப்படி, வரும் ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால், பள்ளி திறக்கும் அதே நாளில் புத்தகம் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே செய்தியாளர்கள் சந்திப்பில், பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளதாகவும், பள்ளிப் பைகள் உள்ளிட்ட பிற பொருட்களை தாமதமின்றி வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க - பிளஸ் 2 பொதுத்தேர்வு: பார்வையற்றோர் அரசுப்பள்ளி 100 விழுக்காடு தேர்ச்சி


2023-24 ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்பொழுது?
அரசு பள்ளி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு (2024) மார்ச் 18 ஆம் தேதி பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 


2023-24 ஆண்டிற்கான 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்பொழுது?
தமிழகத்தில் வரும் கல்வியாண்டிற்கான பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு (2024) மார்ச் 19 ஆம் தேதி முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க - பட்டதாரிகளுக்கு குட் நியூஸ்! விரைவில் ஆசிரியர் தகுதி தேர்வு - அன்பில் மகேஷ்


2023-24 ஆண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்பொழுது?
அடுத்த ஆண்டு (2024)  ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுவுகள் தொடங்கும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 


காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் எப்பொழுது தொடங்கும்?
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 14, 2023 முதல் தொடங்கும் என்றும், அதேபோல அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 11 2023 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


மேலும் படிக்க - உயிருக்கு ஆபத்து! பஸ்ஸில் தொங்கியபடி பயணம் செய்யும் பள்ளிக் கல்லூரி மாணவிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ