தமிழக பள்ளிகளில் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி: காஞ்சிபுரத்தில் மெகா மனித சங்கிலி
Anti Drug Campaign: போதைப் பொருட்களுக்கு எதிராகவும் போதை பழக்கத்திற்கு எதிராகவும் இருப்போம் என மாணவர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு இன்று தமிழகமெங்கும் நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற போதைப் பொருள் விழிப்புணர்வு குறித்த 3ஆயிரம் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட மெகா மனித சங்கிலியில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், காஞ்சிபுரம் எம்எல்ஏ ஆகியோர் கலந்துக் கொண்டனர்.தமிழகம் முழுவதும் பெருகிவரும் போதைப்பொருள் பயன்பாடுகளை தடுத்திடவும், போதை பொருட்கள் கடத்தலை இரும்பு கரம் கொண்டு தடுத்திடவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார். பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளிக்கல்வி துறையின் சார்பில் 3 ஆயிரம் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துக்கொண்ட போதைபொருள் விழிப்புணர்வு மெகா மனித சங்கிலி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் நகரின் முக்கிய சாலைகளான காமராஜர் சாலை,அன்னை இந்திரா காந்தி சாலை,மேற்கு ராஜ வீதி, செங்கழு நீரோடை வீதி, பூக்கடை சத்திரம்,கிழக்கு ராஜவீதி,பஸ் நிலையம், உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட போதைப் பொருள் விழிப்புணர்வு மனிதச் சங்கிலியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர், காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி எழிலரசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, ஆகியோர் பள்ளி மாணவ மாணவிகளுடன் கைகோர்த்து மனித சங்கிலி அமைத்து, போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர்.
மேலும் படிக்க | போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது: முதல்வர் முக ஸ்டாலின்
காலை நேரத்திலேயே சாலை ஓரங்களில் பள்ளி மாணவ மாணவிகள் கைகோர்த்து மனித சங்கிலி அமைத்து நின்று போதைப்பொருள் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.
அதேபோல், போதை பொருட்களுக்கு எதிராக திருவிடைமருதூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீன மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம் ,அரசு தலைமை கொறடா கோவிசெழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போதைப் பொருட்களுக்கு எதிராகவும் போதை பழக்கத்திற்கு எதிராகவும் இருப்போம் என மாணவர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு இன்று தமிழகமெங்கும் நடைபெற்றது.அதன் ஒரு பகுதியாக கும்பகோணம் அருகில் உள்ள திருவிடைமருதூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீன மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், அரசு தலைமை கொறடா கோவி.செழியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டு போதை பொருட்களுக்கு எதிராக இருப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மேலும் படிக்க | ஆளுநரை கேள்வியெழுப்பினால் அண்ணாமலை கொதிப்பது ஏன்? - சவுக்கை வீசும் கம்யூனிஸ்ட்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ