சென்னை: தமிழகத்தில் அதிகரிக்கும் போதைப்பொருட்கள் விற்பனை குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார். போதைப்பொருட்கள் விற்பனை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் அனைத்து மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்.பி.-க்களுடன் போதைப் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
அந்த கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ‘கடந்த அதிமுக ஆட்சியில், போதைப் பொருட்கள் குறித்து தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை. போதைப்பொருட்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுப்படுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.
குஜராத், மஹாராஷ்ராவை விட தமிழகம் போதைப் பொருட்களை கடத்தலில் குறைவு என்பது ஆறுதல் ஆக இருக்கிறது. போதைப்பொருட்கள் தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்க நாம் அனைவரும் முன்வர வேண்டும். போதைப் பழக்கத்தை தடுக்காவிட்டால், எதிர்காலம் பாழாகிவிடும்.
#LIVE: போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் தலைமையுரை https://t.co/O1S53m006h
— M.K.Stalin (@mkstalin) August 10, 2022
மேலும் படிக்க | கோலாகலமாக நிறைவடைந்தது பிரம்மாண்ட செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி!
மாவட்ட கலெக்டர்கள் போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். போதைப்பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபடுபவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்.
போதைப் பொருள் ஆபத்து குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அரசின் முக்கிய கடமையாகும். போதையின் பாதையில் செல்லாமல் ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது.
பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் போதை பொருட்களை பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். இதே கடமை பள்ளி ஆசிரியர்களுக்கும் உள்ளது. இந்த கடமை கல்லூரி நிர்வாகத்திற்கும் இருக்கிறது’ என்று கூறினார்.
இதற்கிடையில் பள்ளிகளில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரவின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- வரும் 12 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை போதை விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட வேண்டும்.
- நாளை காலை 10.30 மணிக்கு அனைத்து வகை பள்ளிகளிலும் போதை விழிப்புணர்வு உறுதிமொழியை எடுக்க வேண்டும்.
- போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை துவக்கி வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ரஜினியை சீரியஸாக எடுத்துக்காதீங்க - வைகோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ