கடலில் குளிப்பது யாருக்குத் தான் பிடிக்காது. ஜில்லென்று வீசும் கடல்காற்று,  நம்மை துரத்திக் கொண்டு வரும் அலைகள் என கடல் அழகை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அந்த வகையில் பலர் அறியாத சாயல்குடி கடற்கரை பற்றி இன்று அறிந்து கொள்ளலாம். இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள ஒரு சில கடற்கரை பகுதிகள் விருதுநகரில் இருந்து செல்லக்கூடிய தொலைவில் தான் உள்ளது. அதில் ஒன்று தான் சாயல்குடி மூக்கையூர் கடற்கரை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாயல்குடி மூக்கையூர் கடற்கரை ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சுற்றி அமைந்துள்ள ஒரு கடலோரப் பகுதியாகும். அருப்புக்கோட்டையிலிருந்து கடற்கரைக்குச் செல்ல ஒரு மணி நேரம் ஆகும். விருதுநகரில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகலாம். கடற்கரையின் சிறந்த அம்சம் என்னவென்றால், இது மிகவும் பிரபலமானதாக இல்லை என்பது தான். 


சாயல்குடி அண்டை மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. விருதுநகரில் இருந்து ஒன்றரை மணிநேரத்தில் சென்றடையலாம். சாயல்குடி மூக்கையூர் கடற்கரை, யாரும் பெரிதாக அறிந்திராத பகுதி என்பதால் மக்கள் கூட்டம் குறைவாக தான் இருக்கும். மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத கடற்கரை என்பதால், வழக்கமான சுற்றுலா தலங்களை (Tourism) போல குப்பைகளாக இல்லாமல், தூய்மையாக இருப்பதை உணரலாம். கடற்கரையில் அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் மட்டும் அவ்வப்போது வந்து கடலில் குளிப்பதை காணலாம். 


அமைதியான கடற்கரை சுழலை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பவர்கள் தாராளமாக சென்று வரலாம். போக்குவரத்து பொருத்தவரை விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டையில் இருந்து சாயல்குடிக்கு அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. எனினும் பயணம் எளிதாக அமைய முடிந்த வரை சொந்த வாகனத்தில் செல்வது சிறப்பு. அறியப்படாத கடற்கரை என்பதால் அருகில் உணவு குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை காண முடியாது. அனைத்துமே சில கி.மீ தொலைவில் உள்ள சாயல்குடி டவுனில் தான் கிடைக்கும். எனவே இங்கு வருபவர்கள் அதற்கேற்ப தயாராகி வர வேண்டும். 


மேலும் படிக்க | நெல்லை டூ காசி - கயா - அயோத்தி ... IRCTC வழங்கும் சிறப்பு ரயில் சேவை... மிஸ் பண்ணாதீங்க!!


குறைந்த செலவில் அருகிலேயே நல்ல இடத்திற்கு சென்று வர வேண்டும் என்பவர்கள் தாராளமாக சாயல்குடி மூக்கையூர் கடற்கரை சென்று வரலாம். கோடை காலம் என்பது தாங்க முடியாத வெப்பம் மற்றும் விடுமுறைக்காக கடலோரப் பகுதிகளுக்கு வருகை தருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக கடற்கரைகளுக்கு, குளிர்ந்த கடல் காற்று சூரியனின் வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது.


கடற்கரையில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சாயல்குடி மிகவும் பட்ஜெட் செலவில் செல்ல ஏற்ற இடமாகும், உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் சென்று பார்க்க ஏற்றது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. வானிலை ஆய்வு மையம் சில பகுதிகளில் சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது, அதே நேரத்தில் கனமழை எச்சரிக்கையும் விடப்பட்டது. எனவே, அப்பகுதிக்கு செல்லும் முன் வானிலை நிலவரத்தை அறிந்து கொள்டு செல்வது நல்லது.


மேலும் படிக்க | குறைந்த செலவில் சிங்கப்பூர் - மலேஷியா டூர் போகலாம்... அசத்தலான IRCTC பேக்கேஜ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ