இந்த ஆண்டு மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு (Medical admission) 12 ஆம் வகுப்பு (Class 12) மதிப்பெண்களை (Marks) பரிசீலிக்குமாறு தமிழக அரசு  (Tamil Nadu) மத்திய அரசை (Central Government) கேட்டுக்கொண்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது பற்றி தனது கருத்துக்களை முன்வைத்து, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி (K.Palanisamy) ஜூலை 8 ஆம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். தற்போதைய சூழலில், தொற்றின் காரணமாக மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு செல்வது கடினமாக உள்ள நிலையில் மாணவர்கள், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் தேர்வு மையம் வந்து தேர்வு எழுதுவது மிகவும் கடினமான விஷயமாக இருக்கும் என்பதையும் முதல்வர் தெளிவுபடுத்தியதாக சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.


உலகில் அநேகமாக அனைத்து நாடுகளையும் தன் பிடியில் சிக்கவைத்துள்ள கொரோனா (Corona) தொற்று இந்தியாவையும் வெகுவாக பாதித்துள்ளது. தமிழகமும் இதிலிருந்து தப்பவில்லை. இதன் காரணமாக பள்ளி இறுதித் தேர்வுகளிலும் பொதுத் தேர்வுகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்நிலையில் மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வின் தேதிகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன.


ALSO READ: தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா..... மொத்த பாதிப்பு 1,26,581 ஆக உயர்வு..!


ஒருபுறம் தொற்றின் தாக்கமும், மறுபுறம் தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்ற நிச்சயமற்ற நிலையும், மாணவர்களின் இறுக்கத்தை அதிகப்படுத்தி வருகின்றன. போக்குவரத்து சாதனங்களும் குறைந்துவிட்ட இந்த சூழ்நிலையில், மாணவர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதில் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். மேலும் இதன் மூலம் அவர்களுக்கு தொற்று பரவக்கூடிய சாத்தியக்கூறுகளும் ஏற்படலாம்.


இந்த இக்கட்டான சூழ்நிலையை தவிர்ப்பதற்கு, மருத்துவ சேர்க்கைக்கு 12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களை பரிசீலிக்கலாம் என்ற கருத்தை தமிழக அரசு முன்வைத்துள்ளது.


ALSO READ: புதுவை ஆளுநர் கிரண் பேடிக்கு கொரோனாவா? வெளியானது அதிர்ச்சி தகவல்...


சமீபத்திய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,22,350 ஆகும். 74,167 பேர் இந்தத் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், 1700 பேர் இறந்துள்ளனர்.