கொரோனா பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது என முதல்வர் பழனிசாமி பெருமிதம்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா காலத்தில் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாக தமிழகம் உள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா தடுப்பில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பேசினார்.


இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்.... தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 73 சதவிகிதம் பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் 84 சதவிகிதம் பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் 81,530 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் விலையில்லா முககவசங்கள் வழங்கப்படும். கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மக்களுக்கு எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கப்படுகின்றன. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது.


ALSO READ | தொப்புள் கொடி வழியாக கருவில் இருந்த குழந்தைக்கு பரவிய கொரோனா...!


கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க மக்களுக்கு ஜிங்க், வைட்டமின் மாத்திரைகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கப்படுகின்றன. சுமார் 4.18 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் பத்திரமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 


வந்தே பாரத் திட்டம், சமுத்திர சேது மூலம் 51 ஆயிரம் பேர் தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே கொரோனா காலத்திலும் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழகம் தான். ரூ. 30,500 கோடி முதலீட்டிற்காண ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. தொழில் நிறுவனங்களுக்கு தாராளமாக கடன் வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர் கூறினார்.