தமிழகத்தில் 39 தொகுதிகளில் ஒரே கட்டமாக நடந்து முடித்த நாடாளுமன்ற தேர்தலில் 7 மணி வரை பதிவான வாக்குகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்திதார். அப்போது பேசிய அவர், " 7மணி வரை 72.09%  வாக்குபதிவு பதிவாகி உள்ளது. ஒரு சில இடங்களில் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களித்து வருகிறார்கள். அதிகப்படியாக கள்ளக்குறிச்சி 75.76% மற்றும் தருமபுரி74.44%. குறைந்தபட்சம் பதிவான தொகுதிகள் என்றால் மத்திய சென்னை 67.35% பதிவாகி உள்ளது. அதேபோல், தென் சென்னை தொகுதியில் 67.85% வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த முறையை விட இப்போது வாக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கோவை: அதிமுகவில் நடந்தது என்ன? பூத்களுக்கு செல்லாத நிர்வாகிகள் - கடைசி நேர டிவிஸ்ட்


கடந்த 2019 ஆம் ஆண்டு 69% இருந்தது. இப்போது 72.09% ஆக உள்ளது. கடைசி வாக்காளர் வரை வாக்கு அளித்த பின்னர் நாளை 12 மணிக்கு இறுதி விபரங்கள் அளிக்கப்படும். தேர்தல் ஆணையத்திலிருந்து ஒரு தகவல் வந்துள்ளது. அதன்படி, தேர்தல் நடைபெறும் அண்டை மாநில எல்லைகளில் தற்பொழுது உள்ள நிலை தொடரும். வாக்கு இயந்திரம் தொடர்பான புகார் பெரிதாக வரவில்லை. ஒரு கட்சியிலிருந்து மட்டும் புகார் அளித்துள்ளார்கள். அது குறித்து உரிய  அதிகாரிகளுக்கு  அனுப்பியுள்ளோம். வாக்கு பதிவு இயந்திரங்களிலும் சரி, பொது பிரச்சனையும் சரி பெரிதாக இல்லை.


ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் சுமூகமான முறையில் தேர்தல் நடைபெற்றது. நிலையான கண்காணிப்பு குழுவும் தேர்தல் பறக்கும் படையும் திரும்ப பெறப்படுகிறது. தேர்தல் நடைபெறும் அண்டை மாநில எல்லைகளில் மட்டும் இப்பொழுது உள்ள நிலை தொடரும்" என கூறினார். அதாவது, தொகுதிகளுக்குள் நடைபெற்று வந்த வாகன சோதனை, மாவட்ட எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகளில் நடைபெற்ற சோதனைகள் எல்லாம் இனி இருக்காது. அதேபோல், பண எடுத்துச் செல்ல இருந்த தடையும் தமிழ்நாட்டுக்குள் இருக்காது. ஆனால் மாநில எல்லைப் பகுதிகளில் இந்த சோதனை இருக்கும்.


மேலும் படிக்க | தேர்தல் களேபரம்! பாஜக - விசிக மோதல், அதிமுக - திமுக மோதல்.... காவல்துறை குவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ