கோவை: அதிமுகவில் நடந்தது என்ன? பூத்களுக்கு செல்லாத நிர்வாகிகள் - கடைசி நேர டிவிஸ்ட்

Coimbatore, Annamalai, SP Velumani: லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற இன்று கோவை தொகுதியில் அதிமுகவினரின் செயல்பாடுகளில் சுணக்கம் தெரிந்தது. இதன் பின்னணியில் பாஜக இருக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 19, 2024, 08:09 PM IST
  • கோவை தொகுதியில் சுணக்கம் காட்டிய அதிமுக
  • பல இடங்களில் பாஜக கூடாரத்தில் இருந்த நிர்வாகிகள்
  • டெல்லியில் இருந்து வந்த அழுத்தம் காரணமா?
கோவை: அதிமுகவில் நடந்தது என்ன? பூத்களுக்கு செல்லாத நிர்வாகிகள் - கடைசி நேர டிவிஸ்ட் title=

கோவையில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது. அதிமுக, திமுக நேரடியாக களம் கண்ட இத்தொகுதியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட்டதால், ஸ்டார் தொகுதியாக மாறியது கோயம்புத்தூர். தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுக தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்தே இந்த தொகுதியை கைப்பற்றியே ஆக வணேடும் என முழு வீச்சில் இறங்கி வேலை செய்யத் தொடங்கியது. அதேபோல், அதிமுகவின் கோட்டையாகவும் கோயம்புத்தூர் பார்க்கப்படுவதால், அக்கட்சியின் தளபதிகளில் ஒருவரான வேலுமணியின் சொந்த தொகுதி என்பதால் அதிமுகவும் வரிந்து கட்டியது. இரண்டு கட்சிகளும்  போட்டிப் போட்டுக்கொண்டு தேர்தல் பணிகளை செய்ய, பாஜக தலைவர் அண்ணாமலை இவர்களுக்கு போட்டி கொடுக்கும் விதமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் படிக்க | தேர்தல் களேபரம்! பாஜக - விசிக மோதல், அதிமுக - திமுக மோதல்.... காவல்துறை குவிப்பு

ஆனால், கோயம்புத்தூர் களத்தில் திமுகவும், அதிமுகவும் தான் இருப்பதாகவும் பாஜக களத்திலேயே இல்லை என சவால் விட்டார் அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்பி வேலுமணி. அவர் தன்னுயை வெயிட்டை காண்பிக்க வேண்டும் என சிங்கை ராமச்சந்திரனுக்காக ஸ்கெட்ச் போட்டு வேலை செய்தார். அதேவேகத்தில் திமுகவும் களத்தில் பணியாற்றியதால் பாஜகவின் அண்ணாமலைக்கு போட்டி என்பதை விட அவருக்கு மூன்றாவது இடமே மிஞ்சும் என்ற நிலை உருவானது. திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் தங்களின் தொடர் பிரச்சாரங்களிலும் அண்ணாமலைக்கு மூன்றாவது இடம் என்பதை திரும்ப திரும்ப கூறி வந்தனர். 

தொண்டாமுத்தூர் தொகுதியில் வாக்களித்தபிறகு பேசிய எஸ்பி வேலுமணி, அதிமுக இந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் என்றும், மக்கள் மாற்றம் வேண்டும் என்று விரும்பும் நிலையில் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உட்பட அனைத்து தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் பாஜக மற்றும் திமுகவினர் ஓட்டுக்குப் பணம் கொடுத்தாலும், ஜனநாயக முறைப்படி நேர்மையாக தாங்கள் இந்த தேர்தலை எதிர்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். 

ஆனால், அதிமுகவின் பூத் ஏஜெண்டுகள் நியமனத்தில் மிகப்பெரிய சுணக்கம் கண்கூடாகவே பார்க்க முடிந்தது. தேர்தல் களத்தில் பிரச்சாரத்தின்போது வரிந்து கட்டிக் கொண்டு வேலைப் பார்த்த அதிமுக, முக்கிய நாளான வாக்கு பதிவு நாளில் எதிர்பார்த்த அளவுக்கு களத்தில் செயல்படவில்லை. பல இடங்களில் அதிமுக பூத்களில் ஆளே இல்லை. பாஜகவின் பூத்களில் அதிமுகவினரை பார்க்க முடிந்தது. இங்கு தான் பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. வாக்குபதிவு நாளில் கோவை தொகுதியில் அதிமுக தீவிரமாக பணியாற்றாதது ஏன்?, மேலிடத்தில் இருந்து ஏதேனும் மறைமுக அழுத்தம் வந்ததா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. இதற்கான விடை தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் தெரியும் என்கிறது அரசியல் வட்டாரம்.

மேலும் படிக்க | கோவை: 830 ஓட்டுகள் காணவில்லை, மறு வாக்குப்பதிவு நடத்தக்கோரி மனு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News