Covid First Dose: கோவிட் தடுப்பூசி முதல் டோஸ் 100% போட்டு சாதனை செய்த தமிழக நகரம் இது
தமிழ்நாட்டில் ஒரு நகரத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் வெற்றிகரமாக போடப்பட்டுள்ளது. அந்த பெருமைக்குரிய நகரம் எது தெரியுமா?
தமிழ்நாட்டில் ஒரு நகரத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் வெற்றிகரமாக போடப்பட்டுள்ளது. அந்த பெருமைக்குரிய நகரம் எது தெரியுமா?
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் நகரம் தான் இந்த சாதனையை புரிந்திருக்கிறது. கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸை மக்கள் அனைவருக்கும் போட்டு முடித்துவிட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
"மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் எடுத்த முயற்சிகளின் காரணமாக, கொடைக்கானல் நகரத்தில் தகுதியுள்ள மக்கள்தொகையில் அனைவருக்கும் கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸை நாங்கள் வழங்கியுள்ளோம்" என்று மாவட்ட ஆட்சியர் திரு எஸ்.விசாகன் தெரிவித்தார்.
ALSO READ | TN corona update District Wise ஆகஸ்ட் 31 மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!
"பழனி நகராட்சியில், தகுதியுள்ள மக்களில் 98 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வரவிருக்கும் வாரங்களில் பழனியிலும் நூறு சதவிகித தடுப்பூசி என்ற இலக்கை அடைவோம்" என்று விசாகன் கூறினார்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ராணி என்று பெருமையுடன் அழைக்கப்படும் கொடைக்கானல், சுற்றுலாப் பயணிகளுக்காக நான்கு மாதங்களுக்குப் பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று திறக்கப்பட்டது.
தமிழக அரசு கோவிட் -19 விதிமுறைகளை தளர்த்தியதைத் தொடர்ந்து கொடைக்கானலுக்கு அனைவரும் செல்ல அனுமதி கொடுக்கப்பட்டது."அனைத்து சுற்றுலாப் பயணிகளும் நகரத்தில் உள்ள கோவிட் -19 நெறிமுறைகளைப் பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்" என்றும் மாவட்ட ஆட்சியர் விசாகன் கூறினார்.
ALSO READ | Corona Worries: அமெரிக்காவில் கொரோனா மட்டுமல்ல, ஆக்சிஜன் பற்றாக்குறையும் அதிகரிப்பு
இதற்கிடையில், திங்களன்று தமிழ்நாட்டில் 1,532 புதிய கோவிட் -19 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது என்று மாநில அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறுகிறது. தற்போது தமிழகத்தில் 17,085 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தரவுகள் கூறுகின்றன.
ஆகஸ்ட் 31ம் தேதி 1.30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி, இந்தியா ஒரு புதிய சாதனையைப் படைத்தது. இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் மொத்த எண்ணிக்கை 65,41,13,508 ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை:1,33,18,718.
தமிழகத்தில் நேற்று 5.75 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் - 3.05 கோடி பேர்.
Also Read | Corona Vaccine: கொரோனா தடுப்பூசி வீணாவதை தடுக்க ரோபோட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR