அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், புளோரிடா மாகாணம்தான் மிக மோசமான பாதிப்பை சந்தித்து வருகிறது. வேகமாக தொற்றுகிற டெல்டா வைரஸ் பரவத்தொடங்கி இருப்பதால் இந்த மாதம் அங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று இந்த மாதத் தொடக்கத்திலேயே சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதை உண்மையாக்கும் வகையில், புளோரிடா மாகாணத்தில் நிலைமை மோசமாகியுள்ள்ளது.
அத்துடன் சேர்த்து அங்கு ஆக்ஸிஜன் சப்ளை குறைவாக உள்ளது என்பதும் கவலைகளை அதிகரிக்கிறது. இது மட்டுமல்ல, இன்னும் சில நாட்களில் ஐடா (Hurricane Ida) புயல் வளைகுடா கடற்கரையை தாக்கும் என்ற கணிப்புகள் வெளியான நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பான தகவல்களும் வெளிவந்துள்ளன.
தென்கிழக்குப் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் கையிருப்பு குறைவாக உள்ளதாகவும், இருக்கும் ஆக்சிஜன் 12 முதல் 24 மணிநேரங்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது.இந்தத் தகவலை மருத்துவமனைகளுக்காக ஆக்சிஜன் கொள்முதல் செய்யும் பிரீமியர் இன்க் (Premier Inc.,) தெரிவித்துள்ளது.
READ ALSO | இந்தியாவில் போலி கொரோனா தடுப்பூசிகள் அதிகரித்துவிட்டது; உலக சுகாதார மையம் எச்சரிக்கை
கோவிட் -19 வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனையில் சேர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. பிராந்தியத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து வெள்ளை மாளிகை, கூட்டாட்சி அவசர மேலாண்மை நிறுவனம் மற்றும் சுகாதார மற்றும் மனித சேவைகள் துறைக்கு அறிவித்துள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
இதுவரை இருந்ததை விட தற்போது ஆக்ஸிஜனுக்கான தேவை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. புளோரிடா, மிசிசிப்பி, ஜார்ஜியா, வட கரோலினா, தென் கரோலினா மற்றும் மேற்கு வர்ஜீனியாவில் உள்ள மருத்துவமனைகள் அனைத்திலும் ஆக்ஸிஜன் இருப்பு அளவு அபாயகரமான அளவுக்கு குறைந்துவிட்டது.
பல மருத்துவமனைகள் ரிசர்வ்வில் இருக்கும் இருப்புகளை நம்பியுள்ளதாக கூறப்படுவது கவலையளிக்கிறது. மருத்துவமனைகளுக்கு மீண்டும் போதுமான அளவு ஆக்சிஜன் வழங்கப்படலாம், ஆனால் பெரும்பாலான மருத்துவமனைகளுக்கு அவை கேட்கும் அளவு கொடுக்கப்படுவதைவிட, சில நாட்களுக்கு தேவையான ஆக்ஸிஜனே கொடுக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
ALSO READ | Dating: சபாஷ்! சரியான கேள்வி! கொரோனா தடுப்பூசி போடாத ஒருவருடன் டேட்டிங் செய்வீர்களா?
நோயாளிகளின் நுரையீரலை சேதப்படுத்தும் கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. மூச்சு பிரச்சனை இருப்பவர்களுக்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். மருத்துவமனைகளில் அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 நோயாளிகள் இருப்பதால், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுவிடக்கூடாது என்று மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வலியுறுத்துகின்றனர்.
புயல் வருவதற்கு முன்னரே, முடிந்தவரை பல நோயாளிகளை வெளியேற்றலாம் என பெரிய மருத்துவமனை அமைப்பான, லூசியானா குழந்தைகள் மருத்துவ மையம் (Louisiana Children’s Medical Center) திட்டமிட்டுள்ளது. புளோரிடா மருத்துவமனைகளில் 16,163 கோவிட் -19 நோயாளிகள் சிகிச்சைபெற்று வருகின்றனர். ஆகஸ்ட் 26 வரையில் 33% தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளை அவர்களே ஆக்ரமித்துள்ளனர்.
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே புளோரிடா மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை தொடர்பான எச்சரிக்கைகளை வெளியிடத் தொடங்கின, ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல தகுதியுள்ள ஓட்டுநர்கள் பற்றாக்குறை இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்கள்.
Also Read | Corona Vaccine: கொரோனா தடுப்பூசி வீணாவதை தடுக்க ரோபோட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR