ஜப்பான் நாட்டில் குறைந்து வரும் மக்கள் தொகையால் ஜப்பானில் தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், ஜப்பான் - இந்தியா இடையேயான தொழிற்துறை கூட்டுறவு அமைப்பான கே.இ.சி.சி அமைப்பின் நிறுவனத் தலைவர் கருணாநிதி காசிநாதன் தலைமையில் கோவையில் சிறப்பு கூட்டம் நடைப்பெற்றது.


கோவை சீமா அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கோவையைச் சார்ந்த தொழில் நிறுவனங்கள் பல கலந்துக்கொண்டன. மேலும் இக்கூட்டத்தில் ஜப்பான் தொழிற்முனைவோரான நோவா, மாரிக்கோ ஆகியோரும் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர்.


மேலும் படிக்க | Flipkart Big Bachat Dhamal: இவ்ளோ விலை கம்மியாவா? அட்டகாசமான தள்ளுப்படியில் ப்ளூடூத் இயர்பட்ஸ்



பின்னர் கூட்டத்தில் பேசிய கருணாநிதி காசிநாதன், டோக்கியோ தமிழ் சங்கத்துடன் இணைந்து இந்தோ ஜப்பான் ஒப்பந்தம் வாயிலாக கோவையை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் தொழில் துறையினருக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை ஜப்பானில் வழங்கும் விதமாக இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுவதாக தெரிவித்தார்.


மேலும், குறிப்பாக அனைத்து துறைகளிலும் ஜப்பானிய நாட்டில் அதிக வேலை வாய்ப்புகள் இருப்பதால் ஜப்பானிய  மொழியை கற்று கொள்ளும் இளைஞர்களுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்படுவதாக தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய ஜப்பான் நாட்டை சேர்ந்த தொழில்முனைவோர் நோவா, தற்போது ஜப்பான் நாட்டில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளும் விதமாக இளைஞர்கள் மற்றும் தொழில் துறையினர் முன்வரவேண்டும் என தமிழக இளைஞர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.


இதற்கான முதல் முயற்சியை தமிழகத்தின் முக்கிய தொழில் நகரமான கோவையில் துவங்கி உள்ளதாக கூறிய அவர், இதனால் ஜப்பான் மற்றும் கோவை இடையே தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.


மேலும் படிக்க | ஜூலையில் கேஜெட் மழை! அறிமுகமாகும் 5G ஸ்மார்ட்போன்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR