Flipkart Big Bachat Dhamal: இவ்ளோ விலை கம்மியாவா? அட்டகாசமான தள்ளுப்படியில் ப்ளூடூத் இயர்பட்ஸ்

பிளிப்கார்ட் கேஜெட்ஸ் தள்ளுபடியில் அட்டகாசமான விலையில் ப்ளூடூத் இயர்பட்ஸ்கள் விற்பனைக்கு வந்துள்ளன.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 1, 2022, 03:41 PM IST
  • பிளிப்கார்ட்டில் மெகா ஆஃபர்
  • ப்ளூடூத் இயர்போன்கள் வாங்க சரியான நேரம்
  • பிளிப்கார்ட் ஆஃபரை தவறவிட்டுவிடாதீர்கள்
Flipkart Big Bachat Dhamal: இவ்ளோ விலை கம்மியாவா? அட்டகாசமான தள்ளுப்படியில் ப்ளூடூத் இயர்பட்ஸ் title=

அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்கு கேஜெட்ஸ் மழை தான்!. முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் தீபாவளியைப் கணக்கிட்டு இப்போதே விற்பனைகளை துவங்கிவிட்டன. வழக்கமாக ஆடித் தள்ளுபடியில் துணிகள் முதல் கேஜெட்டுகள் வரை அனைத்துக்கும் ஆஃபர்களை அள்ளி வழங்குவார்கள். அந்த ஆஃபர்கள் பிளிப்கார்ட்டில் இப்போது கொட்டிக் கிடக்கின்றன. Flipkart Big Bachat Dhamal விற்பனை தொடங்கியுள்ளது. 

இதில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அனைத்துக்கும் ஆஃபர்கள் அள்ளி வழங்கப்பட்டுள்ளன. நீங்கள் ஸ்மார்ட்வாட்ச்கள், க்ரோப்ரோ ஆக்ஷன் கேமராக்கள், கேபிள்கள், சார்ஜர்கள், வயர்லெஸ் இயர்பட்கள் மற்றும் கேமிங் பாகங்கள் ஆகியவற்றை வாங்க விரும்பினால், அதிக தள்ளுபடிகள் கிடைக்கும் இந்த சமயத்தை நீங்கள் தவறவிட்டுவிடாதீர்கள். இந்த பிக் பச்சத் தமால் விற்பனை ஜூலை 1 முதல் 3 வரை நடைபெறும். இதில் இயர்பட்ஸூகளுக்கு அதிக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிராண்டு இயர்பட்ஸான TWS மிக குறைந்த விலைக்கு கிடைக்கிறது. வெறும் 318 ரூபாய்க்கு இந்த இயர்பட்ஸ் ப்ளூடூத் ஹெட்போனை நீங்கள் வாங்கலாம். 

மேலும் படிக்க | வெறும் ரூ. 20000 க்குள் கீழ் வேற லெவல் ஸ்மார்ட் போன்

Grostar TWS புளூடூத் இயர்போன்

Grostar TWS Twins வையர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்களை ரூ.318க்கு வாங்கலாம். இந்த இயர்பட்களை பிளிப்கார்ட்டில் வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும். இது தவிர, இந்த இயர்பட்களை நீங்கள் Flipkart-லிருந்து வாங்கினால், Gaana Plus சந்தாவை 3 மாதங்களுக்கு இலவசமாகப் பெறுவீர்கள்.

கூடுதல் சலுகை என்ன? 

க்ரோஸ்டார் இயர்பட்கள் மைக்குடன் வருகின்றன. அதாவது குரல் அழைப்பும் அதனுடன் எளிதானது. இந்த இயர்பட்கள் புளூடூத் பதிப்பு 5 உடன் வருகின்றன. இந்த வயர்லெஸ் வரம்பு 10 மீட்டர். 20 மணிநேர பேட்டரி ஆயுள் கிடைக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. இந்த இயர்பட்களை சார்ஜ் செய்ய 1-2 மணிநேரம் ஆகும்.

நிறுவனத்தின் தெரிவித்துள்ளதுபடி, இந்த இயர்பட்கள் பேஸ் சூப்பராக இருக்குமாம். வாட்டர் ப்ரூப் இருக்கிறது. அதாவது ஜிம்மில் அல்லது ஓடும்போது வியர்வை விழுந்தால் கெட்டுப் போகாது. இயர்பட்கள் Android மற்றும் iOS இயங்குதளங்களை ஆதரிக்கின்றன. மைக்ரோ-USB போர்ட் சார்ஜ் செய்ய கிடைக்கிறது. 1800mAh பேட்டரி கேஸுடன் கிடைக்கிறது. 20 மணிநேர பேட்டரி ஆயுள் இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | அவசர காலத்தில் உயிரைக் காக்கும் ஸ்மார்போன்! இதை செய்யுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News