தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதியின் படி, சாலிகிராமம் பகுதியில் மக்கள் தொடர்பு அலுவலகத்தை பாஜக சார்பில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை செளந்தரராஜன், மக்கள் சேவையில்,  திமுக தென் சென்னை வேட்பாளரெல்லாம் என் பக்கத்தில் கூட நிற்க முடியாது என்றும், எவ்வளவு கிண்டல் செய்தாலும் தமிழகத்தில் தாமரை மலரதான் செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும், அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இத்தனை இடங்கள் கிடைத்திருக்காது என்பது கணக்கு ரீதியான உண்மை, கூட்டணி என்பது அரசியல் வியூகம், கூட்டணி வைத்திருந்தால் நிச்சயம் கூடுதல் இடம் கிடைத்திருக்கும் என்றும் விருதுநகர் தொகுதிக்கு மறு வாக்குப்பதிவு கேட்க தேமுதிகவிற்கு உரிமை உள்ளது என முன்னாள் ஆளுநர், பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


சீமான் போன்றவர்கள் தேசியத்திற்கு எதிராக உள்ளார்கள், அவர் பேச்சு இளைஞர்களை தூண்டும் விதத்தில் உள்ளது, அவர் போன்றவர்களை வரவேற்க முடியாது, இது என் தனிப்பட்ட கருத்து என்று கூறிய திருமதி தமிழிசை செளந்தரராஜன், திமுகவினர் கொடூரமாக ஆட்டை பலி கொடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பது மோசமான கொடூரமான செயல் என்று கண்டனம் தெரிவித்தார்.


ஏறக்குறைய 3 லட்சம் வாக்காளர்கள் தென்சென்னையில் வாக்களித்திருக்கிறார்கள். 28% வாக்குகள் வந்துள்ளது. 21 மடங்கு தென் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், வெற்றி பெற்றால் ஆறு சட்டமன்ற தொகுதியில் மக்கள் தொடர்பு அலுவலகம் திறக்கப்படும் என்று தெரிவித்திருந்தேன், இப்போது வெற்றியைத் தரவில்லை என்றாலும் இங்கு மக்கள் தொடர்பு அலுவலகம் செயல்படும் என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க | கடிவாளம் போடும் நிதிஷ் குமார்-சந்திரபாபு நாயுடு... கோரிக்கைகளை நிறைவேற்றுமா பாஜக?


நிச்சயமாக இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம் பி இதை செய்யப்போவதில்லை அதிசயமாக 5 ஆண்டுகள் கழித்து வாக்கு கேட்க வெளியே வந்தார். மீண்டும் உள்ளே சென்று விட்டார், இனி வர மாட்டார் என்று கூறிய அவர், திமுக வேட்பாளர் பேசுவதை போல் எங்களுக்கு பேச தெரியாது, வார்த்தைகளை விடுகிறார், பம்மாத்து செய்பவர்களை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று தமிழச்சி தங்கபாண்டியனைப் பற்றி தமிழிசை சூசகமாக தெரிவித்தார். 


அனுபவத்தில் என் அருகில் கூட நிற்க முடியாது. ஒரு நல்ல வேட்பாளரை தேர்ந்தெடுக்க தென் சென்னை மக்கள் தவறிவிட்டார்கள் என்று கூறிய பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ஸ்டாலின் போன்றவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் உங்கள் இணையதள வாசிகளை அடக்கி வையுங்கள் என்று எச்சரித்தார்.


தனது தலைமுடியை பற்றிய விமர்சனத்திற்கு பதிலளித்த அவர், பரட்டை என்றாலும் இது ஒரிஜினல் என்று ஸ்டாலினுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்தார். இந்த அலுவலகம் மக்களுக்காக பணியாற்றும். அரசியல் சாராமல் பொது சேவை செய்ய விரும்பு இளைஞர்கள், மாணவர்கள் யார் வேண்டுமானாலும் எங்களுடன் இணைந்து பணியாற்ற 9550999991 whatsapp எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்ட தமிழிசை சௌந்தரராஜன், தென் சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும் நாங்கள் தான் நாடாளுமன்ற உறுப்பினர் என்று கூறினார்.


மேலும் படிக்க | அதிமுக - பாஜக கூட்டணி கலைவதற்கு அண்ணாமலை தான் காரணம் - எஸ்பி வேலுமணி


மக்களின் வாக்குகளை வாங்குவது உள்ளே இருப்பதற்கு அல்ல, தென் சென்னை பகுதியில் எங்கு குப்பை உள்ளது சாலை பிரச்சனை உள்ளது என்பதெல்லாம் தெரியும் நீங்கள் சரி செய்யவில்லை என்றால் நானே இறங்கி போராடுவேன் என்றும், நான் இப்போது முன்னாள் ஆளுநர் அல்ல முன்னாள் பாஜக மாநில தலைவராக இருக்கிறேன் என்று கூறிய அவர், பலம் பொருந்திய பாரத பிரதமர் எப்போது ஆட்சியில் உள்ளாரோ அது நிலையான ஆட்சி தான் என்று கூறிய பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், எதிர்மறை அரசியல் இல்லாமல் உண்மையான அரசியலை செய்ய முயற்சிக்கிறோம் காமராஜர் காலத்தில் இருந்து நீங்கள் எதிர்மறை அரசியல் செய்கிறீர்கள் என்று சாடினார். 


மாநில அக்கறையோடு உள்ள தேசிய அரசியலை செய்வோம், எவ்வளவு கிண்டல் செய்தாலும் தமிழகத்தில் தாமரை மலரதான் செய்யும் என்று கூறிய தமிழிசை, ஒரே ஒரு எம்எல்ஏ வைத்துக்கொண்டு நீங்கள் ஆட்சிக்கு வரவில்லையா? என்று கேள்வி எழுப்பினார். அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இத்தனை இடங்கள் கிடைத்திருக்காது என்பது கணக்கு ரீதியான உண்மை என்றும், கூட்டணி வைத்திருந்தால் நிச்சயம் கூடுதல் இடம் கிடைத்திருக்கும் எனவும் தெரிவித்தார்.


2026 கூட்டணி பற்றி பேச முடியாது என்று கூறிய தமிழிசை, எங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் அரசியலில் கிடையாது, வியூகத்தை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதுதான் உண்மை. திராவிட முன்னேற்றக் கழகம் இங்குள்ள வாக்குகள் பிரிந்ததால் வெற்றி பெற்றிருக்கிறார்கள். சீமான் போன்றவர்கள் தேசியத்திற்கு எதிராக உள்ளார்கள், அவர் பேச்சு இளைஞர்களை தூண்டும் விதத்தில் உள்ளது, அவர் போன்றவர்கள் வருவதை ஏற்கவில்லை, என் தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்தார்.


மேலும், நான் ஆளுநராக இருக்க வேண்டுமா தலைவராக இருக்க வேண்டுமா என்பதை நான் முடிவு செய்ய வேண்டும் நீங்கள் அல்ல என்று காட்டமாக பேசிய தமிழிசை செளந்தரராஜன், எதிர்க்கட்சி இணையதள வாசிகளில் எச்சரிப்பது போல் உட் கட்சி இணையதள வாசிகளையும் நான் எச்சரிக்கிறேன் என்றும், அதிமுகவை பொறுத்தவரை அனைத்தும் உட்க்கட்சிப் பிரச்சனை என்று தெரிவித்தார்.


விருதுநகர் தொகுதிக்கு தேமுதிக மறு வாக்கு எண்ணிக்கை செல்லட்டும் பிரேமலதா விஜயகாந்த் சொன்னதில் உண்மை இருக்க வாய்ப்பிருக்கிறது, மாநில அரசின் அதிகாரிகள் தான் வாக்கு எண்ணிக்கையில் அதிகம் பணியாற்றினார்கள்,  மறுவாக்கு கேட்க அவர்களுக்கு உரிமை உள்ளது என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க | INDIA Bloc Meeting : ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் நடந்தது என்ன? முக்கிய சந்திப்பில் பங்கேற்காத 2 தலைவர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ