அதிமுக - பாஜக கூட்டணி கலைவதற்கு அண்ணாமலை தான் காரணம் - எஸ்பி வேலுமணி

அதிமுக - பாஜக கூட்டணி கலைவதற்கு அண்ணாமலை தான் காரணம், கூட்டணி இருந்திருந்தால் 30 முதல் 35 தொகுதி வரை  வென்று இருப்போம் - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி.  

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Jun 6, 2024, 02:08 PM IST
  • கூட்டணி கலைவதற்கு அண்ணாமலை தான் காரணம்.
  • கூட்டணி இருந்திருந்தால் 30 முதல் 35 தொகுதி வரை வென்று இருப்போம்.
  • முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி.

Trending Photos

அதிமுக - பாஜக கூட்டணி கலைவதற்கு அண்ணாமலை தான் காரணம் - எஸ்பி வேலுமணி title=

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. கடந்த பல தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்திருந்தாலும், அடுத்து பல வெற்றிகளை பதிவு செய்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணியில் இருந்த போது நாடாளுமன்ற தேர்தலில் 19.3% வாக்குகள் அதிமுக பெற்றது. இந்த தேர்தலில் 20.4 சதவீத வாக்குகள் பெற்று வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அதிமுக செயல்படுத்தி உள்ளது. தொடர்ந்து மக்கள் நலனில் அக்கறை கொண்டு அதிமுக செயல்படும்.

மேலும் படிக்க | சந்திரபாபு நாயுடு இந்தியா கூட்டணிக்கு செல்ல மாட்டார்: எஸ்.வி.சேகர் ஜீ தமிழ் நியூஸுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி

தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம், பாஜகவில் நாங்கள் கூட்டணியில் இருக்கும் போது தமிழிசை,சிபி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இருந்தனர். தற்போது அண்ணாமலை பதவி ஏற்ற பின்பு அதிமுகவில் இருக்கக்கூடிய மூத்த தலைவர்களை பற்றி தவறாக பேசிட்டு வந்தார். இந்த அதிமுக, பாஜக கூட்டணி கலைவதற்கு அண்ணாமலை தான் காரணம். கூட்டணி இருந்து இருந்தால் 30 முதல் 35 தொகுதியை வரை வென்று இருப்போம். நாங்கள் கூட்டணியில் இருக்கும் போது தர்மத்தை கடைப்பிடித்தோம். இனி அண்ணாமலை விமர்சனத்தை விட்டு விட வேண்டும். 2014ல் பாஜக சிபி.ராதாகிருஷ்ணன் நிற்கும்போது கூடுதலாக ஓட்டுகளை வாங்கியுள்ளார். தற்போது அண்ணாமலை குறைவாகத்தான் வாங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் பாஜக நோட்டாவிற்கு கீழும் ஓட்டுகள் வாங்கியுள்ளது.  

மேலும் அண்ணாமலை தேர்தலில் நிறைய வாக்குறுதிகளை அறிவித்திருந்தார். அந்த 100 வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும். பாஜக கூட்டணிக்கு போட்டுள்ள ஓட்டுகளுக்கு இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அதேபோல 100 நாளில் ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய் வழங்குவோம் என தெரிவித்தார். அதையும் நிறைவேற்ற வேண்டும். ஏனென்றால் மத்தியில் அவர்களது ஆட்சி தான் அமைய உள்ளது. அதிமுக சிறு சரிவுக்கு பின்பு தான் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். அண்ணாமலை பாஜக தலைமையை முதலில் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிமுக தொண்டர்கள் எப்போதும் சோர்வு அடைய மாட்டார்கள் தோல்வி எங்களது வெற்றியின் படிக்கட்டுகள் என தெரிவித்தார்.

அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி பேட்டி

அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இணைவோம் என்று சொல்வதற்கு ஓ பன்னீர் செல்வதற்கு எந்த ஒரு தார்மீக உரிமையும் இல்லை. அதிமுக பல்வேறு சோதனைகளை சந்தித்தபோது அதற்கு முக்கிய கருவியாக இருந்து அதிமுகவிற்கு மேலும் மேலும் சோதனைகளை கொடுத்தவர் ஓ பன்னீர்செல்வம். அதிமுக தொண்டர்கள் கோயிலாக வணங்கும் அதிமுக தலைமை கழக அலுவலகத்தை குண்டர்கள் உதவியோடு சூறையாடிச் சென்றவர் ஓ பன்னீர்செல்வம்.  அதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்களை கடுமையாக விமர்சித்த அண்ணாமலையோடு கைகோர்த்துக்கொண்டு தன் சுயநலத்திற்காக அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவர் தான் ஓ பன்னீர்செல்வம். அதிமுக கட்சி முடக்க முயற்சித்த ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு அனைவரும் ஒன்றிணைவோம் வா என அழைப்பு விடுப்பதற்கு எந்த ஒரு அருகதையும் இல்லை என்று கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி பேட்டி அளித்துள்ளார்.

மேலும் படிக்க | 'கோயில் கட்டிய மண்ணிலேயே வீழ்ச்சி...' நாட்டை காக்கும் 40க்கு 40 - ஸ்டாலினின் அடுத்த திட்டம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News