75ஆவது சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரி காந்தி திடலில் தியாக சுவர் கட்டப்பட்டுள்ளது. இதில் விடுதலை போராட்ட வீரர்களின் பெயர்களை கல்வெட்டாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதித்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த தியாக சுவர் குழந்தைகளுக்கு தேச உணர்வை ஊட்ட வேண்டும் என்றும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த  பிரதமர் கூறியுள்ளார். புதுச்சேரியில் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த  அரசு  திட்டங்களை தீட்ட வேண்டும் என்றும் கூறினார். தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை துவக்கி வைக்க  பாரதப்பிரதமர் வருவது மகிழ்ச்சி. ஆனால் எனக்கு ஒரு ஆதங்கம். போட்டிக்கான வரவேற்பு விளம்பரங்களில் பிரதமரின் படமில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



தமிழகத்தைச் சார்ந்தவள் என்று மட்டும் அல்லாமல் இந்தியக் குடிமகன் என்ற வகையிலும் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கக்கூடிய நிகழ்வில் பாரதப் பிரதமரின் படங்களை வைக்க வேண்டும் என்ற என்னுடைய வேண்டுகோளாக வைக்கிறேன். தமிழக  முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் பரந்த மனப்பான்மையுடன் பிரதமர் படங்களை வைக்க வேண்டும்” என்றார்.


மேலும் படிக்க | College Student Death: கட்டணம் கட்ட முடியாத நெல்லை களக்காடு கல்லூரி மாணவி தற்கொலை


மேலும் படிக்க | திமுகவை கண்டித்த எடப்பாடி பழனிச்சாமி மேடையிலேயே மயங்கினார்


மேலும் படிக்க | இது இரண்டும் தான் மாணவிகளின் வாழ்க்கையை சீரழிக்கிறது - அமைச்சர் கீதா ஜீவன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ